குழந்தைகளை வச்சு இப்படி ஒரு ரிஸ்க் தேவையா? வீடியோ போட்டு ஷாக் கொடுத்த நயன்

Published on: April 18, 2024
nayam
---Advertisement---

Actress Nayanthara: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா இரண்டாவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியானார். சந்திரமுகி படம் நயன்தாராவுக்கு பெரிய திருப்பு முனையை கொடுத்த படம். அந்த படத்தின் வெற்றி அடுத்தடுத்து பல வாய்ப்புகளை நயன்தாராவுக்கு கொடுத்தது.

அதிலும் குறிப்பாக அஜித் நடித்த பில்லா படத்தில் பிகினி உடையில் வந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். அதுவரை குடும்ப பாங்கான கதாபாத்திரத்திலேயே நடித்த நயன் பில்லா படத்தில் மிகவும் கவர்ச்சியாக அதுவும் ஸ்டைலிஷாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இதையும் படிங்க: ‘இந்தியன்’ படத்தை விட என் படம்தான் அதிக வசூல்.. ஷாக் கொடுத்த இயக்குனர்! யாருக்காவது தெரியுமா

அதிலிருந்தே கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து விஜய், சிம்பு, சூர்யா போன்ற முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்தார். அதன் பிறகு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றார். பெண்களை மையப்படுத்தி அமையும் படங்களில் நடித்ததன் மூலம் லேடி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார்.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். அவ்வப்போது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா சமூக வலைதளங்களில் அது சம்பந்தமான புகைப்படங்கள், வீடியோக்கள் என அடிக்கடி பதிவிட்டு வந்தார்.

இதையும் படிங்க: மம்மூட்டி ஸ்பாட்லயே அடிப்பாரு!.. அவர்கூட நடிக்கவே மாட்டேன்னு அடம்பிடிச்சேன்.. பாவா லட்சுமணன் பேட்டி!

இந்த நிலையில் சமீபத்தில் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒரு ஆட்டோவில் பயணம் செய்யும் விதமாக அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். கூடவே ஒரு அட்வெண்ட்சர் கூடிய ஒரு ரைடு என பதிவிட்டிருக்கிறார்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C55-BaJRdPB/?igsh=MXYzbnpjaGtxZ2oybw==

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.