Connect with us

Cinema News

நீயெல்லாம் அவனுக்கு முன்னாடி தூசுக்கு சமம்.. இனி ஷூட்டிங் வந்த செருப்பால் அடிப்பேன்… ரஜினியை மிரட்டிய கே.பாலசந்தர்!…

KBalachander: இயக்குனர் கே.பாலசந்தர் ரஜினிகாந்தின் குருநாதர் என்றாலும் அவர் செய்யும் தப்புக்களை சரியான நேரத்தில் சொல்லிக் காட்டி அவருக்கு சரியான நேரத்தில் புரிய வைப்பதில் தன்னுடைய பங்கை என்றுமே அவர் தவறவிட்டது இல்லை என்ற தகவல்கள் தெரிவிக்கிறது.

ரஜினிகாந்த் திரைப்பட கல்லூரியில் படித்து முடித்துவிட்டு வாய்ப்புக்காக காத்திருந்தார். அப்போது அவரை பார்த்து பிடித்து போன கே.பாலசந்தர் நடிக்க வாய்ப்பு தந்தார். அப்படி அவர் நடித்த முதல் திரைப்படம் தான் அபூர்வ ராகங்கள். பெரிய அளவில் வரவேற்பு இல்லையென்றாலும் ரஜினிக்கு நல்ல ரீச் கொடுத்தது.

இதையும் படிங்க: 18 நிமிடத்திற்கு முன்பே வந்து காத்திருந்த அஜித்! அதுவரை என்ன செய்தார் தெரியுமா.. வெளியான புகைப்படம்

இதையடுத்து தொடர்ச்சியாக வில்லனாக சில படங்களில் நைட்த்தவரை ஹீரோவாக்கியதும் கே.பாலசந்தர் தான். தொடர்ச்சியாக பல படங்களில் அவரை ஹீரோவாக வைத்து பல படங்களை இயக்கினார். குருவாக சரியான போது தட்டி கொடுப்பார்.

தப்பு செய்தால் அங்கையே கேட்பார். அப்படி ஒரு சம்பவமும் நடந்ததாம். கே.பாலசந்தரின் இயக்கத்தில் ரஜினி நடித்து கொண்டு இருக்கிறார். அன்றைய நாளின் ஷூட்டிங் முடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டார். இரவு நேரம் என்பதால் குடிச்சிவிட்டு ரெஸ்ட் எடுக்க சென்றாராம்.

இதையும் படிங்க: புரட்சித்தளபதி தளபதி ஆக வேண்டாமா? ஆசையை தூண்டி விஷாலின் அரசியலுக்கு முட்டுக்கட்டை போட்ட பிரபலம்

அந்த நேரத்தில் படப்பிடிப்பில் இருந்து கால் வந்தது. ஒருகாட்சி எடுக்கணும் உடனே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வாங்க என்றார்களாம். பதறிப்போனவர்  வாயை கழுவி ஸ்ப்ரே போட்டு ஷூட்டிங்கிற்கு சென்று நடித்து முடித்தாராம். அதுவரை அமைதியாக பார்த்து கொண்டு இருந்தார் கே.பாலசந்தர்.

நாகேஷ் தெரியுமா? அவன் நடிப்புக்கு முன்னாள் நீ தூசுக்கு சமம். ஆனால் அவனே குடியால் மொத்தமாக அழிந்து போனான். இனிமேல் நீ குடிச்சிவிட்டு நடிக்க வந்தால் செருப்பால் அடிப்பேன் என கறாராக சொல்லினாராம். இதை ஒரு பேட்டியில் ரஜினிகாந்தே சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top