Cinema History
பாரதிராஜா இயக்கத்தில் நடிக்காத 3 ஜாம்பவான்கள்!.. இது எப்படி மிஸ் ஆச்சி தெரியலயே!..
பதினாறு வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கியவர் பாரதிராஜா. கிராமத்து மண் வாசனை தனது திரைப்படங்களில் அப்படியே கொண்டுவந்தவர் இவர்தான். பாரதிராஜாவுக்கு முன்பு தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் கிராமத்து கதைகளை எடுத்திருக்கிறார்கள்.
அதில், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் கிராமத்து மனிதர்களின் பாசம், விவசாயம் செய்யும் முறை இது தொடர்பான காட்சிகளே அதிகம் இருக்கும். ஆனால், கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை கண்ணாடி போல திரையில் பிரதிபலித்தவர் என்றால் அது பாரதிராஜா மட்டுமே.
இதையும் படிங்க: ஜோ படத்துக்கு அடுத்து பெரிய சம்பவம்!.. ரியோ ராஜ் கூட அடடே சாண்டியா?.. பாரதிராஜா என்ன பண்றாரு!..
கிராமத்து மனிதர்களின் அன்பு, காதல், கோபம், வன்மம், பகையுணர்வு, ஆத்திரம், பாசம் என எல்லாவற்றையும் தனது காட்சிகளில் அழகியலோடு சொன்னவர். குறிப்பாக, ஸ்டுடியோவில் மட்டுமே படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்த காலத்தில், கேமராவை தூக்கிக் கொண்டு கிராமங்களுக்கு போனவர் இவர். அதனால்தான் ரசிகர்களுக்கு இவரை பிடித்துப்போனது. பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், மண் வாசனை, கடலோர கவிதைகள், முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே என தமிழ் சினிமாவில் முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் இவர்.
பாரதிராஜாவின் படங்கள் பல நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள். ஆனால், அவர் படங்களை இயக்கும் காலத்தில் சினிமாவில் நடித்து வந்த அதேநேரம் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிக்காத 3 முக்கிய நடிகர்கள் பற்றி இங்கு பார்ப்போம். 70,80களில் காதல், குடும்ப கதை, ஆக்ஷன், திரில்லர் என விதவிதமான கதைகளில் நடித்த நடிகர் ஜெய்சங்கர் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிக்கவே இல்லை.
இதையும் படிங்க: இளையராஜா கிண்டல்… பாரதிராஜா சவாலாய் எடுத்த படம்… எல்லாம் சரிதான்… ஹீரோ இவரா?
அதேபோல், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என கலக்கிய காதல் மன்னன் ஜெமினி கணேசனால் பாரதிராஜாவின் கிராமத்து கதைகளிலும், திரில்லர் படங்களிலும் ஒன்ற முடியாமல் போனது. அதேபோல், பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக கலக்கி வரும் நாசர் இதுவரை பாரதிராஜா படத்தில் நடித்ததே இல்லை.
ஜெய் சங்கரையும், ஜெமினி கணேசனையும் கூட நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நாசர் எப்படி இதுவரை பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிக்காமல் இருந்தார் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.