ஜோ படத்துக்கு அடுத்து பெரிய சம்பவம்!.. ரியோ ராஜ் கூட அடடே சாண்டியா?.. பாரதிராஜா என்ன பண்றாரு!..
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிளாக் ஷீப் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியோ ராஜ்.
விஜய் டிவி பிரபலமாக இருந்த ரியோ ராஜ் பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்ற நிலையில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். முதல் படம் சுமாராக ஓடிய நிலையில், ரியோ ராஜ் அடுத்து நடித்த பிளான் பண்ணி பண்ணனும் படம் சரியாக பிளான் பண்ணாததால் படுதோல்வியை சந்தித்தது.
இதையும் படிங்க: குஷி ஜோதிகா இடுப்பை விட இது சூப்பரா இருக்கே!.. பிகில் நடிகை எப்போ இப்படி காட்ட ஆரம்பிச்சாரு!..
அந்தப் படத்தை திறந்து ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் எனும் படத்தில் நடித்த அந்தப் படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு ஹரிஹரன் ராம் இயக்கத்தில் வெளியான ஜோ திரைப்படம் ரியோ ராஜுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.
அந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து என்ன படத்தில் நடிக்கப் போகிறார் ரியோ என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மீண்டும் விஜய் டிவி பக்கம் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்றுவிட்டாரே என ரசிகர்கள் அப்செட்டான நிலையில், தற்போது அடுத்த தரமான சம்பவத்துடன் வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மட்டும் தான் மோசம்!.. காஷ்மீர்ல கூட இந்த கொடுமை இல்லை.. விஷால் பகிரங்க குற்றச்சாட்டு!..
இயக்குனர் பிரிட்டோ ஜேபி இயக்கத்தில் ரியோ ராஜ், சாண்டி, நட்டி நட்ராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ”நிறம் மாறும் உலகில்” படத்தின் அட்டகாசமான போஸ்டரை தற்போது பா. ரஞ்சித் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு நடிகர்களின் கெட்டப்புகளும் விசித்திரமாகவும் முரட்டுத்தனமாகவும் உள்ளதை பார்த்த ரசிகர்கள் அடுத்த சம்பவம் ரெடி என கருத்துக்களை பதிவிட்டு எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கிச்சானாலே இளிச்சவாயன் தானே!.. யுவன் சங்கர் ராஜா விஜய்க்கு இப்படியொரு துரோகத்தை செய்யலாமா?..