கிச்சானாலே இளிச்சவாயன் தானே!.. யுவன் சங்கர் ராஜா விஜய்க்கு இப்படியொரு துரோகத்தை செய்யலாமா?..
தனுஷின் புதுப்பேட்டை படத்துல வறியா பாடலை போட்டு ரசிகர்களை ஆட வைத்த யுவன் சங்கர் ராஜா தற்போது அதே போல ஒரு பாடலை கவின் நடித்துள்ள ஸ்டார் படத்திற்கு போட்டுள்ளார். இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், அதிதி போஹங்கர் நடிப்பில் உருவாகி உள்ள ஸ்டார் படத்தின் பாடல்கள் வரிசையாக வீடியோ வடிவிலேயே வெளியாகி வருகின்றன.
ஸ்டார் இன் தி மேக்கிங், வின்டேஜ் லவ் சாங் பாடல்களை தொடர்ந்து தற்போது மெலோடி எனும் புதிய பாடலையும் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன் கவின் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானார்.
இதையும் படிங்க: எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!…
மேலும், ஹீரோவாக நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் ரம்யா நம்பீசனுடன் ஜோடி போட்டு நடித்தார். அதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்ற கவின் லாஸ்லியாவை அந்த ஷோவில் காதலித்தார். லாஸ்லியாவின் அப்பா மரியநேசன் நிகழ்ச்சிக்குள் வந்து லாஸ்லியாவை திட்டிய நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.
கவின் மோனிகா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். அதே நேரத்தில் லாஸ்லியா பிரேக்கப் பாடலை வெளியிட்டு தனது சோகத்தை கொட்டித் தீர்த்தார். பிக் பாஸுக்குப் பிறகு கவின் நடிப்பில் வெளியான லிப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த ஆண்டு வெளியான டாடா திரைப்படம் வசூல் ரீதியாக கவினுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
இதையும் படிங்க: கண்ணதாசன் வாங்கிய சத்தியம்!. எம்.ஜி.ஆர் அழைத்தும் போகாத வாலி!.. இது செம மேட்டரு!..
இந்நிலையில், கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் வரும் மே 10ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தில் இடம்பெற்றுள்ள மெலோடி பாடலுக்காக பெண் வேடமிட்டு கவின் கலக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் ரோமியோ படத்தில் செய்த அதே வேலையை இந்த படத்தில் கவின் செய்துள்ளார் அப்படியே காப்பி அடித்து ஸ்டார் ஆகிறார் என ரசிகர்கள் கலாய்த்து வந்தாலும், கவினுக்கு யுவன் போட்டுள்ள அந்த பாடல் தான் தற்போது விஜய் ரசிகர்களை காண்டாக்கி உள்ளது.
கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இந்த மாதிரி மாஸ் பாட்டாக இல்லாமல் கவினுக்கு போய் இப்படியொரு தரமான சம்பவத்தை செய்திருக்கிறாரே யுவன் என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
இதையும் படிங்க: மலையாள படங்களை காலி செய்ய வரும் 2 புதிய தமிழ் படங்கள்!.. எல்லாரும் ஓரமா போங்க!..