கண்ணதாசன் வாங்கிய சத்தியம்!. எம்.ஜி.ஆர் அழைத்தும் போகாத வாலி!.. இது செம மேட்டரு!..

1960களில் தமிழ் சினிமாவில் முக்கிய பாடலாசியர்களாக இருந்தவர்கள் கண்ணதாசனும், வாலியும். வாலிக்கு முன்னோடி கண்ணதாசன். வாலியை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர். தனது வாழ்வில் பல அவமானங்களை சந்தித்தவர். அதனால்தான் கண்ணதாசனின் பாடல் வரிகளில் வாழ்வின் யதார்த்தங்கள் நிரம்பி இருந்தது.

கவிஞர் வாலி கூட கண்ணதாசனின் ரசிகராகத்தான் இருந்தார். கவிஞர் வாலி சினிமாவில் படல் எழுத முயற்சி செய்து கொண்டிருந்த போது கண்ணதாசன் பிசியான பாடலாசிரியராக இருந்தார். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் வேறு வேலைக்கு போய்விடலாம் என வாலி முடிவெடுத்தபோது கண்ணதாசன் எழுதிய ‘மயக்கமா கலக்கமா.. வாழ்விலோ குழப்பமா’ பாடல் அவரின் முடிவையே மாற்றியது.

இதையும் படிங்க: உங்களுக்கு எப்படி இது தெரியும்?!. அஜித்துக்கு வாலி எழுதிய வரிகள்!. வாயடைத்து போன இயக்குனர்…

சினிமாவில் பல காட்சிகளுக்கு பாடல்களை கண்ணதாசன் எழுதி இருந்தாலும் காதல், தத்துவம் இது இரண்டிலும் அவர் எழுதிய வரிகள் காலத்தையும் கடந்து நிற்கிறது. இப்போது பல கிராமங்களில் யாரேனும் இறந்துவிட்டால் கண்ணதாசனின் ‘வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி’ பாடல்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

கண்ணதாசனுக்கு போட்டியாக வந்தாலும் வாலியும் மிகவும் அருமையான பாடல் வரிகளை கொடுத்திருக்கிறார். குறிப்பாக எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களில் வாலி பாடல்களை எழுதி அசத்தி இருக்கிறார். குறிப்பாக எம்.ஜி.ஆரின் புகழை பாடும் அவரின் அரசியல் தொடர்பான பாடல்களையெல்லாம் எழுதியவர் வாலிதான்.

இதையும் படிங்க: கண்ணதாசன் பேச்சை கேட்டு எம்ஜிஆரை புறக்கணித்த வாலி! மதுபோதையில் அரங்கேறிய அந்த சம்பவம்

எம்,ஜி.ஆர் அரசியல் கட்சி துவங்கிய போது தனக்கு நெருக்கமானவர்கள் அந்த கட்சியில் இணைக்க ஆசைப்பட்டார். அதில் வாலியும் ஒருவர். ஆனால், அதற்கு மறுத்துவிட்டார் வாலி. அதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. ஒருமுறை கண்ணதாசன், வாலி மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகிய மூவரும் சிங்கப்பூருக்கு சென்றிருந்தனர்.

அப்போது மாலை நேரம் மது அருந்திக் கொண்டே அவர்கள் பேசிகொண்டிருந்த போது வாலியிடம் கண்ணதாசன் 3 கட்டளைகளை பிறப்பித்தார். ‘ஒன்றிருக்க ஒன்றை நாடாதே.. சொந்தமாக படம் தயாரிக்க கூடாது.. எந்த அரசியல் கட்சியிலும் சேரக்கூடாது’.. என சத்தியம் வாங்கினார். அவர் சொன்ன அந்த மூன்றையும் தன் வாழ்நாளின் கடைசி வரை கடைபிடித்தார் கவிஞர் வாலி.

 

Related Articles

Next Story