Connect with us
ajith vali

Cinema History

உங்களுக்கு எப்படி இது தெரியும்?!. அஜித்துக்கு வாலி எழுதிய வரிகள்!. வாயடைத்து போன இயக்குனர்…

சினிமாவில் சில தீர்க்கதரிசிகள் இருப்பார்கள். பின்னால் நடக்கப்போவதை அறிந்து முன்பே அதற்கு ஏற்றார் போல வேலைகளை செய்திருப்பார்கள். மிகவும் அரிதாகவே அது நடக்கும். இசைஞானி இளையராஜாவுக்கும், கவிஞர் வைரமுத்துவுக்கும் இடையே நல்ல புரிதலும், அலைவரிசையும் இருந்தது.

வைரமுத்து எப்படி பாடல் வரிகளை எழுதுவார் என்பது ராஜாவுக்கு நன்றாகவே தெரியும். எனவே, அவர் மீது இருக்கும் நம்பிக்கையில் பாடல் வரிகளை வாசித்து கூட பார்க்க மாட்டாராம். நேராக பாடல் ரிக்கார்டிங் போய்விடுவார். பாரதிராஜவின் இயக்கத்தில் ராஜா இசையமைத்து வைரமுத்து பாடல்களை எழுதிய படங்களில் ஒன்றுதான் ‘மண் வாசனை’.

இதையும் படிங்க: செல்போனிலேயே தாலி கட்டிய விஜய் ஆண்டனி!.. இது செம லவ் ஸ்டோரியா இருக்கே!…

இந்த படத்தில் ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’ என்கிற பாடலை கம்போஸ் செய்திருந்தார் ராஜா. வைரமுத்து பாடல்களை எழுதி கொடுத்துவிட்டார். பொதுவாக பாடல் பதிவு செய்யப்படும்போது வைரமுத்து அங்கே இருப்பார். ஆனால், அந்த பாடல் ஒலிப்பதிவு செய்யும் போது வேலை காரணமாக தாமதமாக வந்திருக்கிறார். அப்போது ஒலிப்பதிவு நடந்து கொண்டிருந்தது. எஸ்.பி.பியும் ஜானகியும் அந்த பாடலை பாடிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒரு சரணத்திற்கு முன் திருமண மங்களம் ஒலிக்கும் இசையை அமைத்திருந்தார் ராஜா. அடுத்து வரிகள் ‘மாலையில காத்து அல்லி இருக்கு.. தாலி செய்ய நேத்து சொல்லி இருக்கு’ என எழுதி இருந்தார் வைரமுத்து. இதைக்கேட்டு புல்லரித்து போய்விட்டதாக வைரமுத்து சொல்லி இருந்தார்.

இதையும் படிங்க: கேப்டனின் உண்மையான வாரிசு இவர்தான்!.. அட அவரே சொல்லிட்டாரே!.. ஒருவகையில் சரிதான்!..

அதேபோல ஒரு சம்பவம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா படம் உருவானபோது நடந்தது. இந்த படத்திற்காக ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுர வரையில’ என எழுதி இருந்தார் வாலி. பாடல் வரிகளை பார்த்ததும் எதுவும் பேசாமல் அப்படியே உட்கார்ந்துவிட்டார் முருகதாஸ்.

கோபடமடைந்த வாலி ‘இதனால்தான் புது இயக்குனர்களுக்கு நான் பாடல் எழுதுவதில்லை. நல்லா இல்லைன்னா சொல்லு. வேற எழுதி தரேன். இப்படி அமைதியாக இருந்தா எப்படி?’ என சொல்ல, முருகதாஸ் ‘இல்ல சார்.. இந்த பாட்டை எடுக்கும்போது அஜித் வாயில் தீக்குச்சி வைத்துக்கொண்டு நடனம் ஆடுவது போல யோசித்து வைத்திருந்தேன். உங்களுக்கு அது எப்படி தெரியும்?’ என ஆச்சர்யத்துடன் கேட்டாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top