தமிழ்நாடு மட்டும் தான் மோசம்!.. காஷ்மீர்ல கூட இந்த கொடுமை இல்லை.. விஷால் பகிரங்க குற்றச்சாட்டு!..

நடிகர் விஷால் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுமே மிகப்பெரிய மோசடியை செய்து வருவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இரண்டு வரி கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஜிஎஸ்டி மற்றும் லோக்கல் பாடி டேக்ஸ் என இரண்டு வரிகளை வசூல் செய்கின்றனர். 18% ஜிஎஸ்டி மற்றும் 8% லோக்கல் பாடி டேக்ஸ் என கொள்ளை அடிக்கின்றனர் என விஷால் அதிரடியாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: கிச்சானாலே இளிச்சவாயன் தானே!.. யுவன் சங்கர் ராஜா விஜய்க்கு இப்படியொரு துரோகத்தை செய்யலாமா?..

இதை எதிர்த்து வழக்கு போட யாருக்கும் தைரியம் கிடையாது. நான் இதை எதிர்த்து நிச்சயம் வழக்கு போடுவேன் என பேசியுள்ளார். பிரதமர் மோடியை பார்த்து கோரிக்கை வைக்கிறேன் தமிழ்நாட்டில் இருக்கும் இரு வரி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்.

சமீபத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தனது படங்களை உரிய நேரத்தில் ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த விஷால் தற்போது தமிழ்நாடு அரசு மீதும் அது குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதன் காரணமாகவே விஷால் அரசியலுக்கு வரப் போகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!…

மேலும், நான் ஒரு அணில் மட்டும் தான் நடிகர் சங்கம் கட்டடத்தை கட்டும் முழு பணியையும் கார்த்தி தான் பார்த்து வருகிறார். கண்டிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டடம் சிறப்பாக கட்டி முடிக்கப்படும் எனக்கு கூறி இருக்கிறார் விஷால்.

வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி நடித்துள்ள ரத்னம் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. சுந்தர் சியின் அரண்மனை திரைப்படம் ரிலீஸ் தள்ளி போன நிலையில், ரத்னம் சோலோவாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மலையாள படங்களை காலி செய்ய வரும் 2 புதிய தமிழ் படங்கள்!.. எல்லாரும் ஓரமா போங்க!..

 

Related Articles

Next Story