Cinema History
என்னை எல்லா படத்திலும் அழுமூஞ்சியாவே காட்றாங்க!.. நீதான் மாத்தணும்!. இயக்குனரிடம் கேட்ட சிவாஜி!..
சிவாஜி படம் என்றாலே செண்டிமெண்ட் காட்சிகள் அதிகம் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரின் பலமே அதுதான். ஜாலியாக பேசும் கதாபாத்திரங்களில் அவர் அதிகம் நடித்ததே கிடையாது. நடிப்பதற்கே மிகவும் கஷ்டமாக இருக்கும் கணமான வேடங்களை தேர்வு செய்து அதில் தன்னால் எந்த அளவுக்கு சிறப்பாக நடிக்க முடியுமோ அதை கொடுப்பதுதான் சிவாஜியின் ஸ்டைல்.
அவருக்கும் அந்த அந்த மாதிரி கணமான, வித்தியாசமான, நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும், செண்டிமெண்ட் காட்சிகள் அதிகம் இருக்கும் வேடங்களில் நடிக்கத்தான் பிடிக்கும். ஏனெனில், சிறுவயதில் நாடகத்தில் நுழைந்த சிவாஜி பல வருடங்கள் விதவிதமான வேடங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: சிவாஜி பாடலுக்கு சிரிச்சு சிரிச்சு டான்ஸ் ஆடும் ஷிவானி!.. அந்த முண்டா பனியன் தான் தூக்கலா இருக்கு!..
எந்த கதாபாத்திரம் என்றாலும் அது அவருக்குள் ஆவி போல ஊடுருவிட்டதா என்கிற சந்தேகத்தையே அவரின் நடிப்பின் மூலம் யோசிக்க வைத்துவிடுவார். அதனால்தான் அவர் நடிகர் திலகமாக பார்க்கப்பட்டார். பாலும் பழமோ, ஆலய மணியோ, பாச மலரோ சிவாஜியின் நடிப்பை பார்த்தால் இது புரியும். ஆனால், அவரும் ஜாலியான கதைகளில் நடிக்க ஆசைப்பட்டவர்தான்.
60களில் முக்கிய இயக்குனராக பார்க்கப்பட்டவர் ஸ்ரீதர். துவக்கத்தில் இவரும் சீரியஸான படங்களையே இயக்கினார். ஆனால், ஒரு கட்டத்தில் ஜனரஞ்சகமான காமெடி படங்கள எடுத்து தமிழ் சினிமாவின் ரூட்டையே மாற்றியவரும் இவர்தான். இப்போது சுந்தர் சி எடுக்கும் படங்களின் முன்னோடி இவர்தான்.
இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான அந்த ரெண்டு நடிகைகள்!.. யாருன்னு தெரியுமா?..
இவர் இயக்கத்தில் முத்துராமன், காஞ்சனா, நாகேஷ், பாலையா என பலரும் நடித்து 1964ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் காதலிக்க நேரமில்லை. ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த திரைப்படம் இது. இந்த படத்தை பார்த்த சிவாஜி ஸ்ரீதருக்கு போன் செய்து ‘உன் பேரை சொன்னாலே அழுமூஞ்சி டைரக்டர்னு சொன்னவன் மூஞ்சியில கறிய பூசி இருக்க. எனக்கும் இப்படி ஒரு பேர் இருக்கு. அதை மாத்துற மாதிரி என்னையும் வச்சி ஒரு காமெடி படம் எடு. நான் கால்ஷீட் தரேன்’ என சொல்லி இருக்கிறார்.
அண்ணே அந்தமாதிரி உங்களுக்கும் ஒரு கதை வச்சிருக்கேன். கண்டிப்பா சேர்ந்து பண்ணுவோம் என ஸ்ரீதர் சொன்னார். ஆனால், இருவருமே அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்ததால் அந்த கதையை படமாக எடுக்கமுடியவில்லை. ஆனால், நேரம்கூடி வந்து அப்படம் உருவானது. அதுதான் ‘ஊட்டி வரை உறவு’ என்கிற தலைப்பில் 1967ம் வருடம் வெளியானது. இந்த படம் நல்ல வசூலையும் பெற்றது. இந்த தகவலை ஸ்ரீதரே ஒரு பத்திரிக்கையில் கூறி இருந்தார். அதேபோல், அடுத்த வருடமே முழு நீள காமெடி படமாக அமைந்த ‘கலாட்டா கல்யாணம்’ படத்திலும் சிவாஜி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.