Connect with us
gilli

Cinema News

ரீ-ரிலீஸில் அதிக வசூலை அள்ளிய டாப் 5 திரைப்படங்கள்!.. சொல்லி அடித்த கில்லி!…

ஒரு திரைப்படம் முதன் முதல் வெளியாகி ஹிட் அடிப்பதே பெரிய விஷயம். ஆனால், அந்த படம் வெளியாகி சில வருடங்களோ அல்லது பல வருடங்களோ கழித்து மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயமில்லை. அந்த அளவுக்கு அப்படம் ரசிகர்களை கவர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் ரீ-ரிலீஸில் வசூலை பெறும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் எவர் கிரீன் ரீ-ரிலீஸ் மன்னன் என்றால் அது எம்.ஜி.ஆர்தான். அவரின் நடோடி மன்னன், எங்க வீட்டு பிள்ளை, மாட்டுக்கார வேலன், ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண் உள்ளிட்ட சில படங்கள் பல நூறு முறை ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளியிருக்கிறது. இப்போது கூட தமிழகத்தின் சில திரையரங்குகளில் அடிமைப்பெண் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: அஜித்துக்காக 10 வருஷமாக பொத்தி வைத்த டைட்டில்… அருண்விஜயிற்கு தூக்கி கொடுத்த இயக்குனர்…

இந்நிலையில், ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு கல்லா கட்டிய டாப் 5 திரைப்படங்களை பார்ப்போம். இதில் 5வது இடத்தில் இருப்பது ஜீவா, சந்தானம் நடிப்பில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ . சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படம் நல்ல வசூலை பெற்றது. 4 வது இடத்தில் இருப்பது சிம்புவின் ‘விண்ணை தாண்டி வருவாயா’.

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படம் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வசூலை பெற்றது. சிம்பு – திரிஷா இடையேயான கெமிஸ்ட்ரி இப்படத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருந்தது. அடுத்து இதே கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘வேட்டையாடு விளையாடு’.

இதையும் படிங்க: ரஜினி, விஜய் கூட நடிச்சு மொக்க வாங்கியதுதான் மிச்சம்! லக்கி ஸ்டார் அஜித்தான்.. வருத்தத்தில் வில்லன் நடிகர்

கமல், ஜோதிகா நடிப்பில் வெளியான இந்த படம் சில மாதங்களுக்கு முன்பு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு சென்னை போன்ற நகரங்களில் நல்ல வசூலை பெற்றது. தனுஷ் நடித்து வெளியான 3 படமும் சில மாதங்களுக்கு முன்பு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ஓரளவுக்கு வசூலை பெற்றது.

இந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பது விஜய் நடிப்பில் 2004ம் வருடம் வெளியான கில்லி படம்தான். 20 வருடம் கழித்து கடந்த வாரம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம் இதுவரை 17 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. மொத்தத்தில் இதுவரை ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் கில்லியோ அதிக வசூலை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

Continue Reading

More in Cinema News

To Top