அஜித்துக்காக 10 வருஷமாக பொத்தி வைத்த டைட்டில்… அருண்விஜய்க்கு தூக்கி கொடுத்த இயக்குனர்…

by Akhilan |   ( Updated:2024-04-24 02:46:58  )
அஜித்துக்காக 10 வருஷமாக பொத்தி வைத்த டைட்டில்… அருண்விஜய்க்கு தூக்கி கொடுத்த இயக்குனர்…
X

Ajithkumar: நடிகர் அஜித்குமாருக்காக பல வருடமாக பாதுகாத்து வந்த டைட்டிலை அருண்விஜயிற்கு இயக்குனர் ஒருவர் கொடுத்திருக்கும் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஜயகுமார். இவரின் ஒரே மகனான அருண் விஜய் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதிலும் லேட்டஸ்ட்டாக அவர் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர்1 மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: சிவாஜி பாடலுக்கு சிரிச்சு சிரிச்சு டான்ஸ் ஆடும் ஷிவானி!.. அந்த முண்டா பனியன் தான் தூக்கலா இருக்கு!..

இதை தொடர்ந்து அருண்விஜய் தற்போது தமிழ் சினிமாவில் பிஸி நடிகராக இருக்கிறார். அவரின் அடுத்த படமாக ரெட்ட தல உருவாக இருக்கிறது. இப்படத்தினை கிரிஸ் திருகுமரன் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தில் அருண்விஜய் இரட்டை ரோலில் நடிக்க இருக்கிறார்.

இதற்கு முன்னர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தடம் படத்தில் இரட்டை ரோலில் நடித்திருப்பார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ரெட்ட தல படத்தில் இந்த ட்ரிக்கை கையில் எடுத்து இருக்கிறார். தன்யா ராஜேந்திரன் மற்றும் ஸித்தி இதானி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான அந்த ரெண்டு நடிகைகள்!.. யாருன்னு தெரியுமா?..

விரைவில் சென்னையில் தொடங்க இருக்கும் படப்பிடிப்பை குறுகிய நாட்களில் முடிக்க இயக்குனர் முடிவெடுத்து இருக்கிறார்களாம். இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 10 வருடமாக பாதுகாத்து வைத்து இருந்தாராம். ஆனால் அந்த படம் நடக்காமல் போனதால் தற்போது உதவி இயக்குனராக இருந்த குமரனுக்கு கொடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Next Story