Connect with us
Ajith shalini

Cinema News

அமர்க்களம் படத்தில் துவங்கி இப்போது வரை!.. 25 வருட வெள்ளி விழாவை கொண்டாடிய அஜித் – ஷாலினி ஜோடி…

தமிழ்த்திரை உலகில் காதலித்து கரம்பிடித்த தம்பதியர்கள் பலர் உண்டு. இருந்தாலும் அதில் தனித்துவம் பெற்ற காதல் ஜோடி அஜீத் – ஷாலினி தான். இருவரும் அந்த அளவு காதலித்துள்ளனர். அவர்கள் சேர்ந்து நடித்த முதல் படம் அமர்க்களம். அந்தப் படத்திலேயே அவர்களது காதலும் அமர்க்களமாக வளர்ந்தது. சினிமாவில் கத்தியை வைத்துக் கையைக் கீறி தன் காதலை வெளிப்படுத்துவார் கதாநாயகன்.

இந்தக் காட்சிக்கு நிஜமாகவே கத்தி பட்டென பட்டுவிட ரத்தம் பீறிட, ஷாலினிக்குள் புதைந்து கிடந்த காதல் அஜீத்தின் ரத்தம் கண்டு துடிதுடிக்க இது சினிமாவையும் மிஞ்சி விட்டது என்றே சொல்லலாம். அத்தனை பரவசம்… படத்திலும் அந்தக் காதல் உயிர்ப்புடன் இருக்க இதுதான் காரணம். ஒவ்வொரு காட்சியிலும் இருவருக்குள்ளும் இருந்த உண்மையான காதல் வெளிப்பட படம் பார்க்கும் ரசிகர்கள் சிலாகித்து ரசித்தார்கள் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க… திருமணமாகி 24 வருடம்!.. அஜித்துடன் செம ரொமான்ஸ் பண்ணும் ஷாலினி!.. இது செம பிக்!..

அந்த இனிய காதலர்கள் தங்கள் காதலில் ஜெயித்து திருமணம் செய்த அந்த நன்னாள் முடிந்து நேற்றுடன் 25 ஆண்டுகள் அதாவது வெள்ளி விழா கண்டது. இந்த தம்பதியர்களுக்கு அழகான அனோஷ்கா என்ற பெண்ணும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த இனிய தருணத்தைக் கொண்டாடும் விதமாக நேற்று அஜீத்தும், ஷாலினியும் கேக் வெட்டி கொண்டாடினார்களாம். அப்போது இருவரும் தங்கள் காதலுக்கு வயது என்றும் 16 தான் என்பது போல முகம் பதித்து அன்பைப் பரிமாறிக் கொண்டார்கள்.

ajith

இது தொடர்பான வீடியோ வைரலாகி ரசிகர்களுக்கு ஒரு பரவசத்தைத் தந்தது என்றே சொல்ல வேண்டும். இந்த நிலையில் அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அஜீத், ஷாலினியின் புகைப்படங்களை பகிர்ந்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1999ல் சரண் இயக்கத்தில் அஜீத், ஷாலினி இணைந்து நடித்த படம் அமர்க்களம். பரத்வாஜின் இசையில் பாடல்கள் எல்லாமே பட்டையைக் கிளப்பின. அதிலும் உன்னோடு வாழாத, சத்தம் இல்லாத பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டன. இவர்களுக்கு திருமணமாகி 24 வருடங்கள் ஆகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top