Cinema History
காலேஜ் படிக்கும் போது காதலில் விழுந்தாரா விஜய்?!.. அதனால்தான் காதல் படங்களில் அப்படி நடிச்சாரா?!..
இன்றைய தளபதி விஜய் ஆரம்ப காலகட்டத்தில் காதல் படங்களாக நடித்துத் தள்ளினார். அந்த வகையில் பூவே உனக்காக படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதே போல லவ் டுடே படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
விஜய் நடித்த செந்தூரப் பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, சந்திரலேகா, கோயமுத்தூர் மாப்ளே, வசந்த வாசல் படங்கள் எல்லாம் அப்போதுள்ள இளம் ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு தனியிடத்தைப் பிடித்துக் கொடுத்தன.
இந்தப் படங்களில் வெறும் காதல் மட்டுமல்லாமல் கிளுகிளுப்புக்கும், கவர்ச்சிக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்தது. செந்தூரப்பாண்டி படத்தில் யுவராணியுடன் இவர் விளையாடும் கபடியும், விஷ்ணு படத்தில் சங்கவியுடன் இவர் மீன்பிடிக்கும் காட்சிகளையும் பற்றி இன்றும் 80ஸ் குட்டீஸ்களைக் கேட்டால் புன்முறுவல் பூப்பார்கள்.
அதே போல பாத்ரூமில் தனியாக துளை போட்டு சங்கவியின் முதுகில் சோப்பு போட்டு விடும் சீன் ரசிகன் படத்திற்கு ரசிகர்கள் கூட்டத்தை வரவழைத்தது என்றே சொல்லலாம். கோயமுத்தூர் மாப்ளே படத்திலும் விஜய்க்கும் சங்கவிக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகும்.
அதே வேளையில் காலமெல்லாம் காத்திருப்பேன், காதலுக்கு மரியாதை, பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்களில் கவித்துவமாகவும் காதலைக் காட்டி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் விஜய். ப்ரியமுடன், பூவே உனக்காக படங்களில் கிளைமாக்ஸ் காட்சிகளில் அவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் அப்ளாஸ் அள்ளும். அந்த அளவுக்கு அவரது நடிப்பு செம மாஸாக இருக்கும். விஜயின் இந்தப் படங்களுக்கு அப்போது எல்லாம் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கூட்டம் தான் தியேட்டரில் நிரம்பி வழியும்.
அந்த வகையில், ரசிகர் ஒருவர் ‘குறும்புத்தனமாக படங்களிலேயே அந்தக் காலத்தில் விஜய் காதல் காட்சிகளில் நடித்து சக்கை போடு போட்டுள்ளார். அதை ரசித்துப் பார்த்து இருப்பார் போல. அவர் கல்லூரி நாள்களில் விஜய்க்கு நிறைய காதலிகள் இருந்தார்களா?’ என பிரபல தயாரிப்பாளரும், சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு காதல் உண்டுங்கன்னா… அதை இப்போ சொல்ல முடியாதுங்கன்னான்னு விஜயே ஒரு பேட்டில சொல்லி இருந்தாராம்.