கோமாளி என விமர்சித்த பிரபலம்!.. கோபத்தின் உச்சிக்கே போன உலகநாயகன்.. நடந்தது இதுதான்!..

Published on: April 30, 2024
---Advertisement---

Kamalhassan: நடிகர் கமல்ஹாசன் எப்போதும் தன்னை விமர்சிப்பவர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்வார் என்ற எண்ணமே இருக்கிறது. ஆனால் அவரே பிரபல விமர்சகரின் நடந்துக்கொண்ட மோசமான நிகழ்வு குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். எக்கச்சக்கமான ஹிட் படங்களை கொடுத்தாலும் அவரின் நடிப்பில் கூட சில படங்கள் தோல்வியை தழுவி இருப்பது என்னவோ உண்மை.

இதையும் படிங்க: பக்கா கேடியான ரோகிணி… அடே எங்களுக்கே காண்டாகுது.. வில்லிக்கு இவ்வளோ சீனா?

இப்போது இருப்பது போல அப்போது பெரிய அளவிலான விமர்சன கூட்டம் கிடையாது. ஒரு சிலரே இருந்தனர். அப்படித்தான் தமிழில் மிகப் பிரபலமானவர் டாப் டென் நிகழ்ச்சியை நடத்தி வந்த விமர்சகர் சுரேஷ். 90ஸ் கிட்ஸ்களிடம் மிகப் பிரபலமானவர். அந்த வார ரிலீஸ் படங்களை வரிசைப்படுத்தி அதற்கு ஒரு டேக் லைனையும் சொல்லுவார்.

அந்த சமயத்தில் கமல்ஹாசனின் நடிப்பில் தெனாலி திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதற்கு விமர்சனம் சொன்னவர் அதற்கு கோமாளி என்ற டேக்லைனை சொல்லி இருக்கிறார். இது கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியதாம்.

இதையும் படிங்க: அஜித்கிட்ட இருந்த அந்த ஒரு விஷயம்! ‘பில்லா’ல அதான் ஒர்க் அவுட் ஆச்சு.. இப்படி வேற இருக்கா?

பிரச்சனையை நேரடியாக கொண்டு வராமல் பனிப்போராகவே வைத்திருந்தனர். இயக்குனர் கேஸ் ரவிக்குமார், நடிகர் கமல்ஹாசன் இருவரும் தொடர்ச்சியாக தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார், மேலும் தெனாலி படத்தை சன் டிவிக்கு கொடுக்காமல் ராஜ் டிவிக்கு கொடுத்ததற்காகவே இப்படி பேசினேன் எனப் பிரச்சனையை மாற்றினர்.

அதைத் தொடர்ந்து, படக்குழு தரப்பில் இருந்து என்னை அழைத்து இந்த விஷயம் கமலுக்கு பெரிய மன உளைச்சலை கொடுத்து இருப்பதால் இனிமேல் பார்த்து நடந்து கொள்ளும் படி சொல்லி அனுப்பியதாகவும் சுரேஷ் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.