Connect with us

Cinema News

பேனர் கிழிக்கத்தான் தெரியும்!.. பாக்ஸ் ஆபிஸில் கில்லியை தொடக் கூட முடியாத தீனா மற்றும் பில்லா!..

நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு தீனா மற்றும் பில்லா படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. பில்லா திரைப்படம் ஏற்கனவே ரீ ரிலீஸ் செய்யப்பட்டாலும் பெரிதாக வசூல் சாதனை படைக்கவில்லை. இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மீண்டும் அந்த படம் வெளியானது.

மேலும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்குனராக அறிமுகமான தீனா திரைப்படமும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியானது. ஆனால், இரண்டு படங்களும் சமீபத்தில் வெளியான கில்லி திரைப்படம் ரீ ரிலீஸின் போது செய்த சாதனையை செய்யவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: என்.டி.ராமராவிடம் நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்! சம்பள விஷயத்தில் எப்படிப்பட்டவர் தெரியுமா?

கில்லி படத்தின் ப்ரீ புக்கிங் ஒரு வாரத்துக்கு முன்பாகவே தொடங்கியது. மேலும் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் ஆனது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஓவர்சிஸ் என இரண்டு வாரங்களாக கில்லி கொண்டாட்டம் தியேட்டர்களில் தெறிக்க விட்டது.

தீனா ரீ ரிலீஸ் படத்தைப் பார்க்க வந்த அஜித் ரசிகர் இன்னமும் கில்லி ஓடுகிறதா என்கிற பொறாமையில் அந்த போஸ்டரை கிழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காசி தியேட்டரில் இருந்து கில்லி பேனரை கிழித்தெறிந்த எபினேஷ் என்பவரை போலீசார் கைது செய்து இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் தான் செய்தது தவறு என வருத்தம் தெரிவித்து அவர் வீடியோ ஒன்றிலும் பேசியுள்ளார். இதெல்லாம் தேவையா என விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலையில வீடு கட்டவா!.. செர்ரி பழமாக மாறிய ஸ்ருதிஹாசன்!.. அடுத்த அதிர்ஷ்டசாலி யாரோ?..

இந்நிலையில் தீனா மற்றும் பில்லா படங்கள் அஜித்தின் பிறந்தநாளுக்கு வெளியான நிலையில் ஒட்டுமொத்தமாக இரண்டு படங்களும் சேர்த்து ப்ரீ புக்கிங் மட்டும் 83 லட்சம் மட்டுமே செய்ததாகவும் தியேட்டருக்கு சென்று டிக்கெட் வங்கி படம் பார்க்கும் ரசிகர்கள் வசூலையும் சேர்த்தால் அதிகபட்சமாக ஒன்றரை கோடி முதல் 2 கோடி ரூபாய் தான் தீனா மற்றும் பில்லா வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர். கில்லி திரைப்படம் முதல் நாளில் 4 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

லால் சலாம் உள்ளிட்ட புது படங்களை இந்த ஆண்டு 20 கோடி வசூலை கடக்க முடியாமல் தவித்து வரும் நிலையில் இதுவரை கில்லி ரீ ரிலீஸ் திரைப்படம் மட்டும் 25 கோடி வசூலை அள்ளி இருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: நீங்க செஞ்சது ரொம்ப பெரிய தப்பு!.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பயில்வான்!..

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top