
Cinema News
நம்ம எல்லாத்தையும் நல்லா ஏமாத்துராரு!.. சிவாஜியின் நடிப்பை சோதித்து பார்த்த இயக்குனர்கள்!..
Published on
By
நடிகர் சிவாஜி எப்படிப்பட்ட நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். 20 வருடங்களுக்கும் மேல் நாடகங்களில் பல வேஷங்களில் நடித்து அனுபவம் பெற்றவர். அடிப்படையில் நாடக நடிகர் என்பதால் எவ்வளவு பெரிய வசனம் என்றாலும் மனப்பாடம் செய்து பேசி விடுவார். அப்படி நடித்துதான் நாடக நடிகராக பலரையும் வியக்க வைத்தார்.
சினிமாவில் நடிக்க துவங்கியபின் மனப்பாடம் செய்யும் பழக்கம் அவருக்கு போய்விட்டது. மேக்கப்போடும்போது அவர் நடிக்கவிருக்கும் காட்சிக்கு எழுதப்பட்டிருக்கும் வசனத்தை ஒருவரை படிக்க சொல்வார். அந்த வசனங்களை வசனகர்த்தா பேசி காட்டுவார். சில சமயம் 2 முறை வசனங்களை படிக்க சொல்வார்.
இதையும் படிங்க: துப்பாக்கியால் சுடப்போன சிவாஜி!.. நடிகையால் மார்க்கெட்டை இழந்த பிரபு!.. இவ்வளவு நடந்திருக்கா!..
அவ்வளவுதான் அந்த வசனங்கள் அவரின் தலைக்கு ஏறிவிடும். ‘டேக் போகலாம்’ என சொல்லி கேமரா முன்பு நின்று அந்த வசனங்களை அப்படியே பேசி நடித்து அசத்திவிடுவார். பராசக்தி படத்தில் கலைஞர் கருணாநிதி பக்கம் பக்கமாக வசனம் எழுதி இருந்தார். அதையெல்லாம் அசால்ட்டகா பேசி வியக்க வைத்தவர்தான் சிவாஜி கணேசன்.
அதிலும், இறுதிக்காட்சியில் நீதிமன்றத்தில் அவர் பேசும் வசனம் ஒவ்வொன்றிலும் அனல் பறக்கும். அதை சரியாக ஏற்ற இறக்கங்களுடன் பேசினார் சிவாஜி. அது முதல் படம் என்றாலும் அனுபவ நடிகர் போல பின்னி பெடலெடுத்தார் சிவாஜி. நடிப்பு ஒருபக்கம் என்றாலும் வசனங்களை நினைவில் வைத்துக்கொண்டு அவர் பேசுவதை பாராட்டாதவர்களே இல்லை.
இந்த படத்திற்கு பின் சிவாஜி நடித்த திரைப்படம் அந்த நாள். இந்த படத்திற்கு அப்போது பிரபலமான கதாசியராக இருந்த ஜாபர் சீத்தாராமன் கதை, வசனம் எழுதி இருந்தார். இந்த படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தவர் சீனிவாசன். இவர்கள் இருவருக்கும் ஒரு சந்தேகம் இருந்தது. படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்தநாள் நடிக்கும் காட்சிக்கான வசனங்களை வாங்கி செல்வது சிவாஜியின் பழக்கம்.
இதையும் படிங்க: சிவாஜி பாடலுக்கு சிரிச்சு சிரிச்சு டான்ஸ் ஆடும் ஷிவானி!.. அந்த முண்டா பனியன் தான் தூக்கலா இருக்கு!..
எனவே, வீட்டில் வசனங்களை மனப்பாடம் செய்துவிட்டு இங்கு வந்து நம்மை படிக்க சொல்லி கேட்டு அதன்பின் அதை பேசுவது போல சிவாஜி ஏமாற்றுகிறார் என நினைத்தனர். ஒருநாள், நேற்று கொடுத்த வசனம் தொடர்பான காட்சியை இன்று எடுக்கப்போவதில்லை. இன்று வேறுகாட்சியை எடுக்க போகிறோம் என சொல்ல சிவாஜியோ ‘சரி படித்து காட்டுங்கள்’ என சொல்லி இருக்கிறார்.
அவர் படித்து முடித்ததும் ‘டேக் போகலாம்’ என சொன்ன சிவாஜி அவர்கள் படித்து காட்டிய வசனத்தை கொஞ்சம் கூட மாற்றாமல் அப்படியே பேசி நடித்தார். இதைக்கண்டு அவர்கள் இரண்டு பேரும் அசந்து போனார்கள். அந்த சீனிவாசன்தான் பின்னாளில் முக்தா சீனிவாசன் என்கிற பெயரில் சிவாஜியை வைத்து சில படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில்...