Cinema History
கவுண்டமணியால மொத்த படமும் மாறிப்போச்சு!.. பல வருடங்கள் கழித்து சொன்ன சுந்தர்.சி..
Mettukudi: சுந்தர்.சி இயக்கத்தில் செம காமெடி திரைப்படமாக அமைந்த மேட்டுக்குடி படத்தின் முக்கிய உண்மையை சுந்தர்.சி தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
கார்த்திக், கவுண்டமணி, ஜெமினி கணேசன், நக்மா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். சுந்தர்.சி இப்படத்தினை இயக்கி இருந்தார். சிற்பி இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா என்ற மலையாள படத்தின் அடிப்படையில் உருவானது இப்படம்.
இதையும் படிங்க:நான் ஜேசன் சஞ்சய் படத்தில் நடிக்கிறேனா? ஓபனாக சொன்ன கவின்.. அப்போ அது உண்மைதானா?
இப்படத்தின் கதையை விட கவுண்டமணியின் காமெடி பெரிய அளவில் ஹிட்டடித்தது. ஆனால் முதலில் இந்த கேரக்டரையே வைக்கும் எண்ணத்தில் சுந்தர்.சி இல்லை என்ற தகவலை தற்போது தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து சுந்தர்.சி தன்னுடைய பேட்டியில் கூறும்போது, கவுண்டமணியோட வேலை செய்யும் போது சீன் யோசிக்கும் வேலையே இல்லை.
உள்ளத்தை அள்ளித்தா வெற்றி படமாக அமைந்த உடன் சீரியஸ் படத்தினை இயக்கும் முடிவில் இருந்தேன். கார்த்திக் வருவார் கடைசியில் இறந்துவிடுவது போல அமைத்து இருந்தேன். காமெடியில் செய்தால் நம்ம கேரியரே மாறிவிடும் என்பதால் மேட்டுக்குடி படத்தில் கவுண்டமணி நடிக்க வேண்டாம் என முடிவெடுத்திருந்தேன். இதனால் கவுண்டமணி சம்பளம் அதிகமாக இருக்கும் என்று தயாரிப்பாளரிடம் பேசி வைத்தேன்.
இதையும் படிங்க: விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது! ஏன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க
ஆனால் கவுண்டமணி அண்ணனும், தயாரிப்பாளரும் பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர். ஷூட்டிங் நெருங்கியது அவருக்கு ஒரு கேரக்டர் செய்ய வேண்டும். அப்போதைய முடிவில் தான் வேலை வெட்டி இல்லாத மாமா என்று வைத்தோம். அக்கா மகளே இந்து வசனத்தினை நான் எழுதினாலும் அதை அவர் பேசும் போது வேற லெவல் சென்றுவிட்டது.