Connect with us
Sivaji

Cinema News

சிவபெருமானாக வந்து பாடிய சிவாஜி… கண்களால் செய்த அந்த லீலை.. மனுஷன் மாஸ் காட்டியிருக்காரே!

திருவிளையாடல் புராணத்தில் இருந்து ஒரு சில காட்சிகளை எடுத்துக் கையாண்ட படம் தான் திருவிளையாடல். இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். இந்தப் படத்தில் வரும் மறக்க முடியாத பாடல் பாட்டும் நானே பாவமும் நானே. இது விறகு வெட்டும் படலத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

மதுரையை ஆண்ட வரகுணபாண்டியன் அவைக்கு வடக்கிருந்து ஏமநாதன் என்ற பாடகன் வருகிறான். அவரது புலமைக்கு பரிசளித்து தங்கும் இடமும் கொடுக்கிறார் மன்னர். இதனால் கர்வம் கொண்ட பாடகன், எனக்கு சமமாகப் பாட உங்கள் நாட்டில் யாராவது இருக்கிறார்களா என்று சவால் விடுகிறான்.

இதையும் படிங்க… போனை எடுத்தா ஹலோ சொல்றது தானே முறை… என்னங்க சுந்தர்.சி இப்படியா பேசுவாரு?

அப்போது மன்னர் பாணபத்திரரிடம் இதுகுறித்து கேட்கிறார். அவரும் அதற்கு உங்கள் ஆசியும், இறைவனின் அருளும் இருந்தால் ஏமநாதனை ஜெயிக்கிறேன் என்கிறார். அவர் வெளியே வந்தால் ஏமநாதனின் சீடர்களே சூப்பராகப் பாடுகிறார்கள். அடேங்கப்பா இவங்களே இப்படின்னா, ஏமநாதனை எப்படி ஜெயிப்பது என கவலை கொள்கிறார் பாணபத்திரர். சொக்கநாதரிடம் போய் முறையிடுகிறார். நீ கவலைப்படாதே. நான் பார்த்துக்கறேன் என்று சொல்லும் சொக்கநாதர் விறகு விற்க வெளியில் வலம் வருகிறார். வந்தவர் ராத்திரியில ஏமநாதன் தங்கி இருக்கும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பாடுகிறார்.

வெளியில் வந்த ஏமநாதன் ஆச்சரியத்தோடு அவரை யாரப்பா என்று கேட்க நான் பாணபத்திரரின் சீடரா சேரப் போனேன். உனக்கு எல்லாம் அந்தத் தகுதி இல்லடான்னு விரட்டி விட்டுட்டாரு. அப்புறம் தான் விறகு வெட்டப் போனேன் என்கிறார். அப்போது ஏமநாதனுக்குப் பயம் வந்து விடுகிறது. தகுதி இல்லாதவரே இப்படின்னா, பாணபத்திரர் எப்படி பாடுவார் என்று பயந்து நாட்டை விட்டே ஓடி விடுகிறார் ஏமநாதர்.

Sivaji

Sivaji

இதைப் படத்தில் அருமையாகக் காட்சிப் படுத்தியிருப்பார் ஏ.பி.நாகராஜன். ஏமநாதரை ஏமநாதப்பாகவதராக மாற்றியிருப்பார். மக்களுக்கு சிவபெருமான் வந்து இருக்கிறார் என்று தெரிய வேண்டும் என்பதற்காகப் பாடலில் 5 சிவாஜியைக் காட்டி அசத்தியிருப்பார் இயக்குனர்.

கௌரிமனோகரி ராகத்தில் பாட்டும் நானே பாவமும் நானே என பாடல் ஆரம்பிக்கிறது. டிஎஸ்.பாலையா ஏமநாத பாகவதராக வந்து அசத்துவார். விறகுவெட்டியானாக சிவாஜி வந்து ஆட்டம் போட்டுப் பாடுவது செம மாஸாக இருக்கும். இந்தப் பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுதியது தான். கே.வி.மகாதேவன் அருமையாக இசை அமைத்துள்ளார். பாடலில் சிவாஜி சிவபெருமானாக வந்து நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே என பாடும் வேளை அவர் கண்களால் அபிநயம் காட்டி கண்ணடிப்பார். பாடலுக்கே அது சிகரம் வைத்தாற்போல நின்று பேசச் செய்தது.

மேற்கண்ட தகவலைப் பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

 

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top