Cinema News
மணிரத்னத்தை இப்படியா அவமானப்படுத்துறது?.. இளையராஜா என்ன பண்ணார் தெரியுமா?…
Ilaiyaraja Manirathnam: தமிழ் சினிமாவில் இசையில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. சமீப காலமாக இளையராஜாவை பற்றிய பல பிரச்சனைகள் சமூக வலைதளங்களில் பூகம்பமாக வெடித்துக் கொண்டிருக்கின்றது. எவ்வளவுதான் பெரிய இசைஞானியாக இருந்தாலும் அவர் காட்டும் ஆட்டிட்யூட் பலபேரை முகம் சுழிக்க வைக்கிறது.
இசையா பாடலா என்ற வகையில் ஒரு பெரிய விவாதமே முன்வைக்கப்படுகின்றன. தன் இசையை தன் அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக் கூடாது என புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார் இளையராஜா. அது சம்பந்தமான வழக்கு தான் நீதிமன்றத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ரோஜா படத்தில் இளையராஜா காட்டிய ஆட்டிட்யூட் மிகவும் மோசமானது என்ற வகையில் ஒரு தகவலை கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: முத்துவை நம்பாத மீனா.. கைக்கழுவிய அண்ணாமலை… சப்போர்ட் செய்யும் நண்பர்கள்…
ரோஜா படத்தை கவிதாலயா நிறுவனம் தயாரிக்க மணிரத்தினம் அந்த படத்தை இயக்கினார். படத்திற்கு இசை ஏ ஆர் ரகுமான். இந்த படத்தின் மூலம் தான் ரகுமான் முதன்முதலில் இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன் இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டியவர் இளையராஜா தான். அதனால் பாலச்சந்தர் மணிரத்தினத்தை அனுப்பி இளையராஜாவை பார்க்க சொன்னாராம்.
ஆனால் இளையராஜா மணிரத்தினத்தை வெகு நேரம் ஒரு மரத்தடியில் நிற்க வைத்து காக்க வைத்தாராம். நீண்ட நேரம் ஆகியும் மணிரத்தினத்தை இளையராஜா அழைக்கவே இல்லையாம். இது தெரிந்த பாலச்சந்தர் காரை எடுத்து வந்து மணிரத்தினத்தை அழைத்துக் கொண்டு சென்று விட்டாராம். எப்பேர்ப்பட்ட ஒரு இயக்குனர்? இவரை இந்த அளவுக்கா காக்க வைப்பது என்ற கோபத்தில் எனக்கு தெரிந்த ஒரு பையன் இருக்கிறான்.
இதையும் படிங்க: நடிகையை டான்ஸ் ஆட வைக்க திணறிய மாஸ்டர்! அஜித் கொடுத்த ஐடியா.. காமெடியாக முடிந்த படப்பிடிப்பு
அவனை வைத்து இந்த படத்திற்கு இசையமைத்து விடலாம் எனக் கூறிய பாலச்சந்தர் ரகுமான் பெயரை பரிந்துரை செய்திருக்கிறார். அதன் பிறகு தான் ரகுமான் இந்த படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானாராம். ரோஜா படத்திற்கு முன்பு வரை இளையராஜாவும் மணிரத்தினமும் சேர்ந்து ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.