Cinema History
வாலியிடம் பிடிக்காத அந்த ரெண்டு அம்சங்கள்.. கழுவி ஊற்றிய ஜேம்ஸ் வசந்தன்… அட இப்படி எல்லாமா சொன்னாரு?
இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது திரையுலகப் பயணத்தில் பாடகர்கள், கவிஞர்கள், நடிகர்கள் பற்றிய அனுபவங்களை பிரபல படத்தயாரிப்பாளரும், இயக்குனருமான சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்து கொண்டார். அவற்றில் வாலியைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். வாங்க என்னன்னு பார்க்கலாம்.
இதையும் படிங்க… மங்காத்தா அஜித்துக்கு டஃப் கொடுக்கும் சிம்பு!.. தக் லைஃப் வீடியோ வெறித்தனம்!…
எனக்கு தனிப்பட்ட விதத்தில் வாலி ஒரு ஏற்புடைய கவிஞர் அல்ல. அவர் காசு காசுன்னு பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. ரகுமானின் இசை நிகழ்ச்சியில் அவர், ‘ரகுமான் நீ மெட்டைப் போடு என் பையில் துட்டைப் போடு’ன்னு அவர் சொன்னார். அதே மேடையில், ‘நீ நிறைய படங்கள் பண்ணனும். அப்போ தான் எனக்கு நிறைய பணம் கிடைக்கும்’னு சொன்னார். மேடையில் காசு காசுன்னு பேசிக்கிட்டு அசிங்கமா இருக்கு. அப்போ அந்தக் கவிதையையும் பாடல் வரிகளையும் ரசிக்கறது அந்நியமாயிடுது.
அப்படின்னா. ‘காசுக்காக நீ என்ன வேணாலும் எழுதுவியா?’ என்ற எண்ணம் வருது. அது தேவையில்லை. இது திரைப்படத்துறை, வணிகத்துறைன்னு எல்லாருக்குமே தெரியும். அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப காசைப் பற்றிப் பேசணும். அப்புறம் விரசமான பாடல்களை நிறைய அறிமுகப்படுத்தின பெருமையும் அவருக்கு உண்டு. மற்றபடி மனிதனாக ஒண்ணும் அவர் மீது கோபம் இல்லை. எனது தனிப்பட்ட முறையில் அவர் இந்த இரண்டு விஷயத்திலும் எனக்கு ஏற்புடையவர் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க… குறி வச்சாச்சு.. வெளியான ‘தக் லைஃப்’ சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! இது வேற ரகம்
கவிஞர் வாலி பழம்பெரும் பாடலாசிரியர். இவர் எந்தத் தலைமுறைக்கு வேண்டுமானாலும் பாடல் எழுதுவதில் வல்லவர். இவர் கொஞ்சம் விரசம் கலந்த பாடல் எழுதுவதில் கில்லாடி. அதனால் தான் அவரை வாலிபக் கவிஞர் என்றே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். அந்த வகையில் இசை அமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் இவரைப் பற்றி விமர்சித்திருப்பது சினிமா உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.
சசிக்குமாரைப் பற்றிப் பேசும்போது, அவர் எடுத்த ஈசன் படம் ரொம்ப நல்ல படம். கொஞ்சம் வன்முறை ஜாஸ்தி. அது அந்தக் காலகட்டத்துக்கு ஒத்து வரல. ஆனா இப்போ ரீரிலீஸ் பண்ணினா நல்லா ரீச்சாகும் என்றும் சசியிடமே ஜேம்ஸ்வசந்தன் சொன்னாராம்.