தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி ரோல் இவருக்கு தானாம்… அசால்ட்டாக தட்டி தூக்கிய நடிகர்…

Published on: May 8, 2024
---Advertisement---

Thuglife: நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் ஜெயம்ரவி நடிக்க இருந்த ரோலுக்கு மற்றொரு முக்கிய நடிகரை தேர்ந்தெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மெட்ராஸ்  டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமல்ஹாசனுடன் திரிஷா நடித்து வருகிறார். ஆனால் இப்படத்தில் திரிஷாவின் ஜோடியாக நடிகர் சிம்பு நடிப்பதாகவும் கூறப்படுகிறது. முதலில் இந்த ரோலில் நடிக்க இருந்தவர் துல்கர் சல்மான். கால்ஷீட் காரணமாக அவர் படத்திலிருந்து வெளியேற அந்த கேரக்டரில் நடிகர் சிம்பு ஒப்பந்தமானார்.

இதையும் படிங்க: ரஜினி கமலைத் தாண்டி பாலசந்தருக்கு பிடித்த நடிகர்! இவர யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

இன்று காலை அவரின் எண்ட்ரி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவால் வெளியிட்டப்பட்டது. ஸ்டைலிஷ் லுக்கில் சிம்பு போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இப்படத்தில் நடிக்க இருந்த நடிகர் ஜெயம் ரவியும் சில காரணங்களால் படத்திலிருந்து வெளியேறினார். அவர் கேரக்டருக்கு யார் என்ற பேச்சுவார்த்தை பல நாட்களாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

 முதலில் இந்த ரோலில் அரவிந்த்சாமி, அருண் விஜய் என பலரின் பெயர் அடிபட்ட நிலையில் தற்போது அந்த ரோலுக்கு நடிகர் அசோக் செல்வன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அவர் நடிப்பில் வெளியான சமீபத்திய திரைப்படங்கள் சரியான கதை தேர்வாக இருந்தது. இதனால் தக் லைஃபில் முக்கிய கேரக்டராக அசோக் செல்வன் இருப்பார். இது அவரின் கேரியரின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: ரஜினியும் கமலும் சிவாஜிக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா? எப்பவுமே கெத்து சூப்பர்ஸ்டார்தான்..!

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.