Connect with us

Cinema News

விஜய் ரசிகர்களை மொத்தமாக ஏமாற்றிய பிரபல நிறுவனம்!.. குருவி ரீ ரிலீஸுக்கு வச்சுட்டாங்களே வேட்டு!..

தரணி இயக்கத்தில் விஜய் நடித்த கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து மூன்று வாரங்கள் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் காரணமாக மொக்கை படங்களை 300 கோடி ரூபாய் வசூல் செய்து வரும் நிலையில் கில்லி படத்தை ரீ ரிலீஸ் செய்தால் 30 கோடி வருவதெல்லாம் சர்வ சாதாரணம் என ரசிகர்கள் கெத்து காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: எதை எதை காட்டக் கூடாதோ!.. அதையெல்லாம் வளைச்சு வளைச்சு காட்டும் பிக் பாஸ் பிரபலம்!..

விஜய் நடித்த படங்களை ரீ ரிலீஸ் செய்து தொடர்ந்து வெளியிட்டு வந்தாலே தியேட்டர்கள் தப்பித்து விடும் என ரோகினி தியேட்டர் ஓனர் ரேவந்த் சரண் சமீபத்திய பெட்டியில் கூறியிருந்தார்.

கில்லி படத்துக்கு பிறகு ரீ ரிலீஸ் வேல்யூ கொண்ட படமாக தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா நடித்து வெளியான குருவி திரைப்படம் இருக்கும் இடம் ரசிகர்கள் எதிர்பார்த்து அந்தப் படத்தை மீண்டும் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதையும் படிங்க: மஞ்சுமெல் பாய்ஸை மதிக்காத ஓடிடி நிறுவனங்கள்!.. பகத் ஃபாசில் படம் பல கோடிக்கு ஓடிடியில் விற்பனையா?..

விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு குருவி திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக வாய்ப்பு இல்லை என்றும் அதற்கு பதிலாக கலைஞர் யூடியூப் சேனலில் குருவி படத்தை வெளியிடப் போவதாக தற்போது கலைஞர் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான குருவி திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட மனமில்லாமல் யூடியூப் சேனலில் வெளியிடப் போகின்றனர் என விஜய் ரசிகர்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் பிறந்தநாளுக்கு வில்லு படம் தான் தற்போது வெளியாகப் போவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: யாஷின் படத்தில் நயன்தாரா!.. சம்பளம் இத்தனை கோடியா?!.. ரொம்ப ஓவராத்தான் போறீங்க!..

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top