Connect with us

Cinema News

அதுக்கு இதுவா… ஃபஹத்துடன் இந்த வாரம் ஓடிடியில் மோத இருக்கும் தமிழ் படம்.. கடுப்பில் ரசிகர்கள்…

Fahad: தமிழ் சினிமாவில் இந்த வார ஓடிடி ரிலீஸால் ரசிகர்கள் ஒரு பக்கம் கவலையில் இருந்தாலும் வீக் எண்டுக்கு வெளியாக இருக்கும் ஃபகத் பாசில் படத்துக்கு செம வெயிட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது தமிழ் ரசிகர்கள் தியேட்டர் ரிலீஸை விட ஓடிடி ரிலீஸுக்கு அதிகமாக காத்து இருப்பது நடக்கிறது. அதிலும் இந்த வார ரிலீஸ் மேலும் சிறப்பானது என்றே கூறலாம். இந்த வருட தொடக்கத்தில் இருந்தே தமிழ் சினிமா தொய்வை சந்தித்து வருகிறது. ஆனால் அதற்கு நேர் மாறாக மலையாள சினிமா உயர்ந்து இருக்கிறது.

இதையும் படிங்க: பணத்துக்காக இவ்ளோ மலிவா போயிட்டாரே! சுத்த அயோக்கியத்தனம்.. இசைஞானிக்கு சவுக்கடி கொடுத்த பிரபலம்

அதில் முதல் ஹிட்டான பிரேமலு இரண்டு வாரத்துக்கு முன்னர் ரிலீஸானது. கடந்த வாரம் மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் வெளிவந்தது. இந்நிலையில் இந்த வாரம் ஃபகத் பாசில் நடிப்பில் பெரிய ஹிட் கொடுத்த ஆவேசம் திரைப்படம் ரிலீசாக இருக்கிறது. பிரைம் ஓடிடியில் இன்று இரவு மே10ந் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

ஆனால் இப்படத்துக்கு சரியான போட்டியாக எந்த படமும் தமிழில் வெளியாகவே இல்லை. ஓடிடியில் தற்போது விஜய் ஆண்டனியின் ரோமியோ திரைப்படம் அதே ப்ரைம் ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது. மே10ந் தேதி இப்படமும் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

இதையும் படிங்க: இளையராஜாவின் சொத்து யுவனுக்கே இல்லையா? இது என்னங்க புது உருட்டா இருக்கு… ஆனா விஷயமே வேற!

Continue Reading

More in Cinema News

To Top