Cinema News
அந்த சீனில் அப்பாஸ் இல்லாம வேறு யாராவது நடிச்சிருந்தா? மனம் திறக்கும் மாளவிகா
Actress Malavika: தமிழ் சினிமாவில் 90, 2000 களில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாளவிகா. கிட்டத்தட்ட பத்து வருடங்களில் 42 படங்களுக்கு மேல் நடித்து ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார். உன்னை தேடி என்ற படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் முதன்முதலில் அறிமுகமானார் மாளவிகா. அந்த படத்தில் நடிக்கும் போது முதலில் அவருக்கு ஆடவே தெரியாதாம்.
அதை பற்றி சுந்தர் சி சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் காமெடியாக சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். மாளவிகாவின் இப்போது உள்ள நடனத்தை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது என்றும் ஆரம்பத்தில் அவருக்கு ஆடவே தெரியாது என்றும் சுந்தர் சி கூறியிருந்தார் . இந்த நிலையில் மாளவிகா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களை ஒரு தனியார் youtube சேனல் பேட்டி மூலமாக தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: விளம்பரங்களே போதும் போல… படத்துக்கு இவ்வளோ கம்மியாவா? ஆச்சரியப்பட வைக்கும் சூர்யாவின் சொத்து மதிப்பு…
அவருடைய திருமணம் காதல் திருமணம். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறதாம். திருமணம் ஆகி ஒரு வருடம் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாராம். அதன் பிறகு கர்ப்பமாகி விட்டதால் அதிலிருந்து சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாராம். ரஜினி, கமல், அஜித், விஜய், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் மாளவிகா கார்த்திக் உடன் நடித்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது.
அது மட்டுமில்லாமல் மிகவும் ரசித்து நடித்தேன் என அவர் நடித்த லவ்லி திரைப்படத்தை பற்றி கூறியிருந்தார். மேலும் திருட்டுப் பயலே என்ற படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா நடித்திருப்பார். அந்த படத்தில் ஒரு கில்மா சீன் ஒன்று இடம்பெறும். அதில் அப்பாஸுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருப்பார் மாளவிகா.
இதையும் படிங்க: இளையராஜாவின் சொத்து யுவனுக்கே இல்லையா? இது என்னங்க புது உருட்டா இருக்கு… ஆனா விஷயமே வேற!
அதைப்பற்றி அவர் கூறும் போது அந்த மாதிரி சீனில் நடிக்கும் போது அப்பாஸ் இருந்ததனால் மட்டுமே எனக்கு மிகவும் கம்ஃபர்ட் ஆக இருந்த.து இதே அந்த கேரக்டரில் வேறொருவர் நடித்திருந்தால் இந்த அளவுக்கு நான் கம்ஃபர்ட் ஆக உணர்ந்திருப்பேனா என்பதை சொல்ல முடியாது. ஏனெனில் நானும் அப்பாஸும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள். அதனாலேயே எனக்கு அந்த சீனில் நடிக்கும் போது பெரிதளவில் பாதிப்பு இல்லை என கூறியிருந்தார்.