Connect with us
vijayakanth

Cinema History

இந்த படம் ஓடவே ஓடாது!.. நம்பாமல் விஜயகாந்த் நடித்த படம்!. அட சூப்பர் ஹிட் ஆச்சே!..

சில படங்களில் நடிக்கும்போது அந்த நடிகர்களுக்கே இந்த படம் ஓடாது என தோன்றும். ஆனால், சம்பளம் வாங்கிவிட்டோம்.. நடித்து கொடுத்துவிடுவோம் என நடிப்பார்கள். ஆனால், சில சமயம் எதிர்பாராதவிதமாக அந்த படம் ஓடிவிடும். அது அவர்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும். ரஜினி, கமல் உட்பட எல்லோருக்கும் இப்படி நடந்திருக்கிறது.

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினி நடித்து 1989ம் வருடம் வெளியான திரைப்படம் ராஜாதி ராஜா. ரஜினியின் வழக்கமான ஸ்டைலில் இருந்து கொஞ்சம் மாறி இப்படம் எடுக்கப்பட்டிருக்கும். எனவே, இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது ரஜினிக்கும், சுந்தர்ராஜனுக்கும் மோதல் ஏற்பட்டது. எனவே, இந்த படம் ஓடாது என நினைத்துதான் ரஜினி அப்படத்தில் நடித்தார். ஆனால், படமோ சூப்பர் ஹிட் அடித்தது. அது ரஜினிக்கே ஆச்சர்யமாக இருந்தது.

இதையும் படிங்க: லக்கி ஸ்டாரா?.. ஃபிளாப் ஸ்டாரா?.. கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

இது விஜயகாந்துக்கும் நடந்திருக்கிறது. துவக்கம் முதலே விஜயகாந்த் ஒரு ஆக்‌ஷன் ஹிரோவாகவே பார்க்கப்பட்டார். ரவுடிகளை துவம்சம் செய்வது, துப்பாக்கியால் தீவிரவாதிகளை சுடுவது என நடித்து வந்தார். அப்போதுதான். ஆர்.வி.உதயகுமார் விஜயகாந்துக்கு ஒரு கதை சொன்னார். விஜயகாந்துக்கு பிடிக்கவில்லை. ஆனால், இப்ராஹிம் ராவுத்தர் சொல்லியதால் நடித்தார். அதுதான் சின்னக்கவுண்டர்.

வழக்கமாக விஜயகாந்த் தனது படங்களில் பக்கம் பக்கமாக வசனம் பேசுவார்.. வில்லன்களை புரட்டி எடுப்பார்.. தன்னைப்பற்றி உயர்வாக அவரே பேசுவார். ஆனால், சின்னக் கவுண்டர் படத்தில் அப்படி காட்சிகள் எதுவும் இல்லை. எல்லோரும் வசனம் பேச விஜயகாந்த் அமைதியாக நிற்பார்.

இதையும் படிங்க: தன் அண்ணன் தற்கொலைக்கு காரணமாக இருந்த மணிரத்னம்! இவ்ளோ ஓப்பனா ஒரு பேட்டியா?

ஒருகட்டத்தில் கோபமான விஜயகாந்த் ஆர்.வி.உதயகுமாரின் உதவியாளர்களிடம் ‘எல்லோரும் வசனம் பேசுறாங்க. எனக்கு உதயகுமார் வசனமே எழுத மாட்டானா?. நான் சும்மா அப்படியே நிக்குறேன். இந்த படம் ஓடாது’ என சொல்லி இருக்கிறார். இதுபற்றி ஊடகம் ஒன்றில் அப்படத்தின் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியிருந்தார்.

chinna goundar

விஜயகாந்த் என்ன நினைக்கிறார் என்பது எனக்கு புரிந்தது. ஒருநாள் ‘இந்த கதையின் ஹீரோ ஒரு மேன்மையானவன். அதிகம் பேசமாட்டான். அவனை பற்றி ஊரே பேசும் போது அவன் ஏன் பேச வேண்டும்?’ என அந்த கதாபாத்திரத்தின் உண்மையை எடுத்து சொன்னேன். விஜயகாந்த் புரிந்து கொண்டார்’ என ஆர்.வி.உதயகுமார் சொல்லி இருந்தார்.

இந்த படத்தில்தான் விஜயகாந்துக்கு அடையாளமாக அமைந்த ‘அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே’ பாடல் அமைந்தது. கேப்டன் விஜயகாந்த் இறந்தபோது தொலைக்காட்சிகளில் இந்த பாடல் ஒலித்துகொண்டே இருந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top