Connect with us
mani

Cinema News

தன் அண்ணன் தற்கொலைக்கு காரணமாக இருந்த மணிரத்னம்! இவ்ளோ ஓப்பனா ஒரு பேட்டியா?

Manirathnam: தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் மணிரத்தினம் ஒரு புகழ்பெற்ற இயக்குனராக இருந்து வருகிறார். இவருடைய அண்ணன் ஜீவி என்பவரும் ஒரு புகழ்பெற்ற தயாரிப்பாளராக இருந்தவர் தான். இவர் சில ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது  திரையுலக மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தற்கொலைக்கு காரணமே மணிரத்தினம் தான் என பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஓப்பனாக ஒரு பேட்டியை கொடுத்திருப்பது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் கூறியதாவது: மாணிக்கம் நாராயணனும் மணிரத்தினம் அண்ணன் ஜீவியும் மிக நெருக்கமான நண்பர்களாம். மாணிக்கம் நாராயணனை பார்க்க ஜிவி அடிக்கடி இவருடைய அலுவலகத்திற்கு செல்வாராம். அவர் தயாரிப்பாளராக இருந்த சமயம் ஏகப்பட்ட பிரச்சனைகளுடன் தான் இருந்தாராம் ஜீவி. அப்படி ஒரு சமயம் திடீரென இரண்டு நாட்கள் காணாமல் போய்விட்டாராம் ஜீவி.

இதையும் படிங்க: குடிகார அண்ணன்! இளையராஜாவை பத்தி கங்கை அமரன் சொன்னது உண்மைதானா?

அப்புறம் ஒரு நாள் மாணிக்கம் நாராயணன் வீட்டிற்கு வந்து  ‘நான் தற்கொலை செய்ய நினைத்தேன்’ என கூறினாராம் ஜீவி. அதற்கு மாணிக்கம் நாராயணன் ஜிவியை சத்தம் போட்டு  ‘நான் தான் இருக்கிறேன்ல. உங்கள் பணப்பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன். அதை பற்றி தான் பல பேரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அதனால் இதைப் பற்றி எதுவும் யோசிக்க வேண்டாம்’  என ஜீவியிடம் ஆறுதலாக பேசியிருக்கிறார் மாணிக்கம் நாராயணன்.

அதன் பிறகு ஒரு சமயம் ‘அன்பு செழியன் பணம் விஷயமாக என்னை மிகவும் டார்ச்சர் செய்கிறார். அதனால் அவரை ஆஃப் செய்வதற்காக ஒரு அறுபது லட்சத்துக்கு இரு செக்குகளாக எழுதிக் கொடு’ என மாணிக்கம் நாராயணனிடம் வந்து ஜீ.வி கேட்டாராம். ஆனால் அப்போது மாணிக்கம் நாராயணன் அக்கவுண்டில் பணம் இல்லையாம். இருந்தாலும் சும்மா அறுவது லட்சம் என அந்த செக்கில் எழுதிக் கொடு. அதை காட்டி அன்புச் செழியனை சிறிது நாட்கள் அமைதிப்படுத்தி விடுகிறேன் எனக் கூறி அந்தச் செக்கை வாங்கிக் கொண்டு போனாராம்.

இதையும் படிங்க: அடேங்கப்பா!.. ஹேண்ட்ஸம் வில்லனா கோட் படத்தில் மிரட்டப்போகும் மோகன்!.. வெளியானது சூப்பர் போஸ்டர்!..

அவர் சொன்னதைப் போலவே மாணிக்கம் நாராயணன் கொடுத்த செக்கை நம்பி அன்பு செழியனும் மேலும் ஜீவியை டார்ச்சர் செய்யாமல் இருந்தாராம். சிறிது நாட்கள் பிறகு மாணிக்கம் நாராயணன் கோலாலம்பூர் ஒரு விழாவிற்கு போயிருந்த சமயத்தில் ஜீவி மாணிக்கம் நாராயணன் வீட்டிற்கு தொடர்பு கொண்டு அவர் மனைவியிடம் கேட்டிருக்கிறார். இப்போது தான் மாணிக்கம் நாராயணன் கோலாலம்பூர் போன விஷயம் ஜீவிக்கு தெரிய அன்றைக்கே தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இதை மாணிக்கம் நாராயணனுக்கு இன்னொரு நபர் மூலமாக தொலைபேசி வாயிலாக செய்தி போய் சென்றடைந்து இருக்கிறது.  இது மட்டுமல்லாமல் அவர் உயிருடன் இருக்கும் போதே மாணிக்கம் நாராயணன் ஜீவியிடம்  ‘உங்கள் தம்பி தான் இருக்கிறாரே? உங்களுக்காக அவரை ஒரு படம் எடுத்து தரச் சொல்லுங்கள். அதன் மூலம் உங்கள் கடனை அடைத்து விடலாம்’ என ஐடியா கொடுத்திருக்கிறார். இதைக் கேட்ட ஜீவி  ‘அவன் எல்லாம் ஒரு மனுசனா? அவன பத்தி பேசாத’ என மணிரத்தினத்தை மிகவும் கடிந்து கொண்டாராம் ஜிவி.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை முந்திய சூரி!.. வெற்றிமாறன் படத்தையே இறக்க போறாரு.. அமரன் என்னதான் ஆச்சோ?..

அதாவது ஜீவியின் பணப் பிரச்சினையில் மணிரத்னம் எந்தவித உதவியும் செய்யவில்லை என்பதுதான் மாணிக்கம் நாராயணின் கருத்தாக இருக்கிறது. ஒரு வேளை பண்ணியிருக்கலாம். ஆனால் ஜிவியை சாக விட்டிருக்க கூடாது. இன்று  நீங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறீர்கள். ஜீவிக்கு எதாவது செய்திருந்தால் இன்று அவரும் அவர் மனைவியுடன் சந்தோஷமாக இருந்திருப்பார் அல்லவா?

manickam

manickam

மணிரத்னத்தை எல்லாரும் கொண்டாடுகிறீர்களே? அவர் அண்ணன் தற்கொலைக்கு ஒரு காரணமாகவும் இருந்திருக்கிறார். அவர் எல்லாம் என்ன மனுஷன்? அவரால் நான் பல கோடி ரூபாய் நஷ்டமடைந்ததுதான் மிச்சம். 60 வயதுக்கு மேல் இந்த உலகத்தில் இருந்து என்ன செய்ய போகிறார் என கண்டபடி பேசியிருக்கிறார் மாணிக்கம் நாராயணன்.

google news
Continue Reading

More in Cinema News

To Top