Connect with us

Cinema News

அடேங்கப்பா!.. ஹேண்ட்ஸம் வில்லனா கோட் படத்தில் மிரட்டப்போகும் மோகன்!.. வெளியானது சூப்பர் போஸ்டர்!..

மைக் மோகன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் வெள்ளிவிழா நாயகன் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களை கொடுக்க காத்திருக்கிறார். நடிகர் மோகனுக்கு இன்று 68-வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், தளபதி விஜய் உடன் அவர் நடித்து வரும் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போது பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லியுள்ளது.

மூடு பனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மோகன் நெஞ்சத்தைக் கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, காற்றுக்கென்ன வேலி, கோபுரங்கள் சாய்வதில்லை, மனைவி சொல்லே மந்திரம், விதி, நூறாவது நாள், நான் பாடும் பாடல், உதயகீதம், தெய்வப்பிறவி, பிள்ளை நிலா, தென்றலே என்னை தொடு, இதயக்கோவில், ராகம் மௌன ராகம், மெல்லத் திறந்தது கதவு, பாடு நிலாவே, நாளைய மனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் என்றென்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை முந்திய சூரி!.. வெற்றிமாறன் படத்தையே இறக்க போறாரு.. அமரன் என்னதான் ஆச்சோ?..

சினிமாவில் நடிகராக வேண்டும் என்றெல்லாம் நினைக்காத மோகனுக்கு வங்கி வேலைக்கு சென்று இருக்க வேண்டியவரை சினிமா தன்வசம் அழைத்து வந்து அவருக்கு வெள்ளிவிழா படங்களை வாரித் தந்தது.

எஸ் பி பாலசுப்ரமணியம் பாடல்களை இவரே பாடுகிறார் என ஸ்டார் படத்தில் பாரதியின் மீசை மறைந்தது போல ரசிகர்களின் கண்களை மறைத்து நடித்து கலக்கினார். விஜய்யின் மாமா சுரேந்தார் தான் பல படங்களில் மோகனுக்கு டப்பிங் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இளையராஜா பயோபிக்கில் ஏஆர் ரஹ்மானா? சான்சே இல்ல.. அதற்கான காரணத்தை கூறிய பிரபலம்

வீண் வதந்திகள் கிளப்பப்பட்டு ஒரு காலக்கட்டத்துக்கு மேல் சினிமாவில் இருந்து காணாமல் போன இந்த ஸ்டார் மீண்டும் ஹரா மற்றும் கோட் மூலமாக மீண்டும் ஜொலிக்க வருகிறார்.

மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு செம ஹேண்டஸமான போட்டோவை வெளியிட்டு கோர்ட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தற்போது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இந்த லுக்கில் தான் கோட் படத்தில் மோகன் நடித்துள்ளாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: அட இது அந்த படம்ல!.. வெளியே கசிந்த ராயன் படத்தின் கதை.. சரியா வருமா?!..

google news
Continue Reading

More in Cinema News

To Top