இப்பவே அடுத்த பலியாடு விஜய் தான்னு கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க!.. எல்லாத்துக்கும் காரணம் அதுதான்!..

Published on: December 23, 2023
---Advertisement---

பாஸ், பஸல் டைட்டிலே நல்லா இருந்துச்சு இயக்குநர் வெங்கட் பிரபு தேவையில்லாமல் விஜய்யை பலியாடாக ஆக்குகிறாரா என அடுத்து கசிந்துள்ள GOAT என்கிற டைட்டிலை வைத்து அஜித் ரசிகர்கள் மற்றும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் இப்பவே கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த ஆண்டு வாரிசு மற்றும் லியோ படங்களின் மூலம் சுமார் 900 கோடி ரூபாயை தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸுக்கு கொடுத்திருக்கிறார் தளபதி விஜய். அடுத்த ஆண்டு தளபதி 68 படத்தின் மூலம் அடுத்த இண்டஸ்ட்ரி ஹிட்டுக்கு தயாராகி வருகிறார்.

இதையும் படிங்க: சலார் படம் சொதப்ப குறிப்பா இந்த 4 பேர் தான் காரணம்!.. அதுல ஹைலைட்டே அந்த நடிகர் தான்!..

அதே போல போட்டியும் அடுத்த ஆண்டு ஹெவியாகவே உள்ளது. கமல்ஹாசனின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா, விக்ரமின் தங்கலான், அஜித்தின் விடாமுயற்சி, ரஜினிகாந்தின் வேட்டையன் என வரிசை கட்டி முன்னணி நடிகர்களின் பிரம்மாண்ட படங்கள் ரெடியாகி வரும் நிலையில், அதற்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் விஜய் படம் இருக்கும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அந்த படத்திற்கு GOAT – Greatest of All Time என டைட்டில் வைத்தாலும் மஞ்சத் தண்ணி ஊத்தி திருப்பாச்சி படத்துல ஆடு போல விஜய்யை தொங்க விட்ட பேரரசு தான் ஞாபகத்துக்கு வருகிறார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த டைட்டில் கிடையாது என அர்ச்சனா கல்பாத்தி இந்த முறை மறுப்பு ஏதும் தெரிவிக்காத நிலையில், அதுதான் உறுதியான டைட்டிலா என ரசிகர்கள் முடிவே கட்டி விட்டனர்.

இதையும் படிங்க: குளூர்ல நீ வேற டெம்பரேச்சர் ஏத்தி கொல்லுறியே!.. மொத்த அழகையும் காட்டும் மாளவிகா!…

சூர்யாவை வைத்து மாசு என்கிற மாசிலாமணி, நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி என காமெடி பண்ண வெங்கட் பிரபு விஜய்க்கு சூப்பர் ஹிட் படம் கொடுப்பாரா? சொதப்புவாரா என்றே ஒரே கன்ஃபியூஸா இருக்கு என்கின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.