Cinema News
‘எஜமான்’ படத்தில் நடிக்க பயந்த ரஜினி!.. இவ்ளோ ரிஸ்க் எடுத்தா நடிச்சாரு?
Ejaman: அன்புள்ள ரஜினிகாந்த் படத்திற்கு பிறகு ரஜினியுடன் முதன் முதலில் ஜோடி சேர்ந்து மீனா நடித்த திரைப்படமாக அமைந்தது எஜமான் திரைப்படம். 1993 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை ஆர்வி உதயகுமார் இயக்கினார். இளையராஜாவின் இசையில் படத்தில் அமைந்த அத்தனை பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்.
இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நம்பியார், மனோரமா, நெப்போலியன் போன்ற பல முக்கியமான நடிகர்கள் நடித்திருந்தனர். வானவராயனாக ரஜினிகாந்த் வல்லவராயனாக நெப்போலியன் ஆகிய இருவரும் போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தில் தங்களுடைய கதாபாத்திரங்களை மெருகேற்றியிருப்பர். இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் மிகவும் ரிஸ்க் எடுத்து ரஜினி நடித்ததாக அந்த படத்தில் பணியாற்றிய ஸ்டாண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: இனிமே இப்படி காட்டினாத்தான் வாய்ப்பு!.. தரலோக்கலா இறங்கி தவிக்கவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்…
அதாவது நெப்போலியனுக்கும் ரஜினிகாந்துக்கும் மாட்டுவண்டி ரேஸ் நடக்கும். அதில் யார் ஜெயித்து காட்டுகிறார்களோ அவரே மீனாவின் கணவர் என்ற விதத்தில் அந்த போட்டி நடைபெறும். அதில் ரஜினி ஒரு குட்டியான சந்தில் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வருவது மாதிரியும் வருகிற வழியில் ஒரு குழந்தை நடுரோட்டில் இருக்க அதை தன் கால்களில் தூக்கி அதன் அம்மாவிடம் ரஜினி கொடுப்பது மாதிரியும் அந்த சீனில் இடம் பெறும்.
முதலில் இந்த சீனில் நடிக்க ரஜினி மிகவும் பயந்தாராம். மற்ற வண்டி என்றாலும் பரவாயில்லை. இது மாட்டு வண்டி. திடீரென அந்த குழந்தையை பார்த்து மாடு மிரண்டு போய் ஏதாவது ஆகிவிட்டால் என்ன பண்ணுவது என யோசித்தாராம் ரஜினி. ஆனால் ராக்கி ராஜேஷ் ஒன்றும் பயப்படத் தேவையில்லை. எல்லா ஆங்கிளிலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் தாராளமாக வண்டியை ஓட்டி வாருங்கள் என சொல்ல அதன் பிறகு பயந்து கொண்டே தான் ரஜினி வண்டியை ஓட்டி அந்த குழந்தையை காப்பாற்றுவது போல அந்த சீனில் நடித்துக் கொடுத்தாராம்.
இதையும் படிங்க: பல்லாங்குழியாடும் சூரரைப் போற்று பொம்மி!.. ஆரஞ்சு சேலையில் ஆட்டி படைக்கும் அபர்ணா பாலமுரளி!..
அந்த காட்சி படமாக்கப்பட்டதும் ரஜினி ராக்கி ராஜேஷிடம் நல்ல வேளை குழந்தை தப்பித்துக் கொண்டது எனக்கூறி பெருமூச்சு விட்டாராம். அதே காட்சியில் போட்டியின் இறுதியில் நெப்போலியன் மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுவது மாதிரியான ஒரு காட்சி இடம் பெற்று இருக்கும். ஆனால் உண்மையிலேயே நெப்போலியன் விழுந்ததுதானாம். அதுவும் ஆரம்பத்திலேயே விழுந்து விட்டாராம். அதை காட்சியின் கடைசியில் எடிட்டிங்கில் சேர்த்து சீனோடு இணைத்து விட்டாராம் ராக்கி ராஜேஷ். இப்படித்தான் அந்த காட்சி உருவானது என ஒரு பேட்டியில் கூறினார்.