Connect with us
Goundamani

Cinema History

சினிமாவே சத்திரம்னு வந்துட்டயா?… இயக்குனரை கலாய்த்த கவுண்டமணி.. நடந்தது இதுதான்!..

இயக்குனர் ராதாபாரதி மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவரது இயக்கத்தில் முதல் படமே சக்கை போடு போட்டது. அது பிரசாந்த் நடித்த வைகாசி பொறந்தாச்சு. இவர் தனக்கும், கவுண்டமணிக்குமான தொடர்பு பற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மணிவண்ணன் சாருடன் முதல்ல சேர்ந்த படம் நூறாவது நாள். அடுத்து 24 மணி நேரம். சத்யராஜ் சாருக்கு ஒரு விக் வச்சோம். அவரோட கேரக்டர் ரொம்ப பேசப்பட்டது. கவுண்டமணி தன்னை சினிமா நடிகனாகவே நடிச்சது இல்லை. நாடக நடிகனாகத் தான் நினைச்சி நடிச்சார். எவ்வளவு பெரிய வசனமா இருந்தாலும் சர்வ சாதாரணமா பேசுவாரு. அந்த அளவு இன்வால்மென்ட்டா இருப்பாரு.

இதையும் படிங்க… விஜய் அடம்பிடிக்க விட்டுக் கொடுத்த விஜயகாந்த்!.. ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் இப்படிலாம் நடந்திருக்கா?

அப்புறம் அந்தப் பக்கம் வர்ற கேமராமேன், புரொடியூசர்னு ஒரு ஆளை விட்டு வைக்க மாட்டாரு. இவன் தூங்கி எழுந்துருச்சி மூஞ்சைக் கழுவாம அப்படியே வர்றான் பாருன்னு சொல்வாரு. இன்னொருத்தனைப் பார்த்து இவன் முதுகுக்குத் தண்ணீ ஊத்தலம்பாரு. சீப்பு வச்சிருக்கான். ஆனா இவன் எதுக்கு வச்சிருக்கான்னே தெரியல… இவனுக்கு என்ன மண்டைல இருக்குன்னு சொல்வாரு எங்கிட்ட சம்பந்தமே இல்லாம சொல்வாரு. நான் வேற எதையாவது எழுதிக்கிட்டு இருப்பேன். ஏய் கேட்கறீயா… கேளுறா… யேய் கேளுறான்னு சொல்வாரு.

இதையும் படிங்க… அந்த நடிகையுடன் லிவிங் டூகதரால்தான் பிரிந்தாரா கௌதமி?. கமலுடன் நடிக்க தயங்கிய நடிகைகள்… இதுதான் காரணமா?

“பாரு படிக்கறதுக்கு வக்கில்லாம, பள்ளிக்கூடம் போறதுக்குக் கொடுப்பினை இல்லாம வந்து உட்கார்ந்துட்டானுங்க. சினிமாவே கெடச்ச சத்திரம்னு. உட்கார்ந்து எழுதுறாம்பாரு..”ன்னு சொல்வாரு. நான் வேற யாரையோ சொல்றாருன்னு சுத்தி சுத்திப் பார்ப்பேன். என்னையைத் தான் சொல்றாருன்னு அப்புறம் தான் தெரியும். “என்னடா பள்ளிக்கூடம் போயிருக்கியா, காலேஜ் போயிருக்கியா,

அங்க பெயில் ஆகியிருப்ப. அதான் சினிமாவே சத்திரம்னு வந்துட்டே… வந்துட்டு நானும் டைரக்டர் ஆவணும்… டைரக்டர் ஆவணும்னு சொல்றது”ன்னு கிண்டல் பண்ணுவாரு. அப்போ நான் தசரதன் சார் படத்துக்கு காப்பி எழுதிக்கிட்டு இருக்கேன். அவருக்கு டயலாக் ஸ்பெஷலா தேவை இல்லை. சின்ன க்ளூ கொடுத்தா போதும். அவரு பேசறதே செம காமெடியா இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top