Connect with us

Cinema News

சிஎஸ்கே மேட்ச் பார்க்க வந்த பிளடி பெக்கர்ஸ்!.. ஜெயிலர் 2 அப்டேட் கேட்ட ரசிகர்கள்!.. வைரல் வீடியோ!..

இந்த வாரம் வெளியான ஸ்டார் படத்தில் நாயகனாக நடித்த கவின் அடுத்ததாக நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் பிளடி பெக்கர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், நெல்சன் படங்களில் வரும் புரோமோ வீடியோ போல காமெடியாக பிளடி பெக்கர் படத்தின் அறிமுக வீடியோ வெளியானது.

ஸ்டார் படத்தில் சாக்லேட் பாயாகவும் விபத்தில் அடிபட்டு கோர முகத்துடன் நடித்திருந்தார் கவின். அடுத்ததாக நெல்சன் தயாரிப்பில் நடிக்க உள்ள படத்தில் பிச்சைக்காரன் கெட்டபில் அவர் நடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கின.

இதையும் படிங்க: சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழித்த வசனகர்த்தா… நடந்தது இதுதான்!..

தொடர்ந்து நெல்சனுடன் பயணித்து வரும் கவின் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை சேப்பாக்கத்தில் இயக்குனர் நெல்சன் மற்றும் ரெடின் கிங்ஸ்லியுடன் கண்டு ரசித்தார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இயக்குனர் நெல்சன் பார்த்த ரசிகர்கள் ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் கேட்டனர். அவர்களை பார்த்து கையை அசைத்த இயக்குனர் நெல்சன் விரைவில் அப்டேட் வரும் எனக் கூறினார். நெல்சன் மேட்ச் பார்க்க வந்த நேரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் அபார வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

இதையும் படிங்க: சினிமாவே சத்திரம்னு வந்துட்டயா?… இயக்குனரை கலாய்த்த கவுண்டமணி.. நடந்தத் இதுதான்!..

நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி மீண்டும் பெரிய வெற்றியை பெற்றார். தளபதி விஜய்யை வைத்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் வேஸ்ட் ஆக்கி போன நிலையில், அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டார்.

ஆனால் கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக மாறியுள்ளார் நெல்சன். ஜெயிலர் படத்தின் வெற்றியால் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வெயிட்டான சம்பளத்தை கொடுத்து கவனித்த நிலையில், தற்போது ஃபிலமண்ட் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி கவினுக்காக படம் எல்லாம் தயாரிக்க ஆரம்பித்து விட்டார். ரஜினிகாந்த் கூலி படத்தை முடித்து விட்டு ஜெயிலர் 2 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அந்த நடிகையுடன் லிவிங் டூகதரால்தான் பிரிந்தாரா கௌதமி?. கமலுடன் நடிக்க தயங்கிய நடிகைகள்… இதுதான் காரணமா?

google news
Continue Reading

More in Cinema News

To Top