யாருக்குமே இல்லாத அந்த சிறப்பு நதியாவுக்கு இருக்கு…! இதற்குக் காரணமே இவர் தானாம்..!

Published On: May 15, 2024
Nathiya
---Advertisement---

தமிழ்த்திரை உலகில் ஒரு நடிகை குறிப்பிட்ட நடிகருடன் ஜோடி சேர்ந்தால் கிசுகிசு தானாக வந்து விடும். சில நடிகைகள் என்ன செய்தாலும் கிசுகிசு தான். ஆனால் கிசுகிசுவே வராத நடிகையும் இருக்கிறார்;. அவர் தான் நதியா. இதற்குக் காரணம் அவரது அம்மா தானாம். நடிகை எங்கு சென்றாலும் அவரைக் கூடவே இருந்து கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டாராம்.

மலையாள இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான படம் பூவே பூச்சூடவா… படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. பாடல்கள் சக்கை போடு போட்டன. இந்தப் படத்தில் தான் நதியா அறிமுகமானார். முன்னர் மலையாளப்படங்களில் நடித்து வந்த அவர் இந்தப் படத்தில் இருந்து தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.

Poove Poochoodava
Poove Poochoodava

சீனியர் நடிகர்களுடன் தான் நடிப்பேன். புதுமுக நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்பவர் அல்ல நதியா. யாராக இருந்தாலும் கதை தான் அவருக்கு முக்கியம். நீச்சல் உடை, கட்டிப்பிடிப்பது, படுக்கையறை போன்ற கண்றாவி காட்சிகளைத் தவிர்த்து தனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்து நடித்து வந்தார். அதனால் தான் தாய்மார்கள் மத்தியில் அவருக்கு எப்போதும் தனியிடம் இருந்தது.

இப்படி நடித்த போதும் அவரது கால்ஷீட் எப்போதும் பிசியாகவே இருந்தது. தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்காகக் காததுக்கிடப்பார்களாம். ரஜினி, விஜயகாந்த், பிரபு, மோகன், சுரேஷ், சத்யராஜ் என சீனியர் நடிகர்களுடன் நடித்து சக்கை போடு போட்டவர் நதியா.

சிவாஜியுடன் இவர் இணைந்து நடித்த ஒரே படம் அன்புள்ள அப்பா. திருமணத்திற்கு முன் இவர் கடைசியாக நடித்த படம் ராஜாதி ராஜா. அதன்பிறகு திருமணமானதும் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாமிரபரணி, சண்டை, பட்டாளம் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்து மாஸ் காட்டினார். திருமணமானதும் 2 பெண் குழந்தைகளுடன் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டாராம்.