Cinema History
கைவிட்ட இளையராஜா.. கங்கை அமரனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பாக்கியராஜ்…
தமிழ்த்திரை உலகில் நடிகர், கதாசிரியர், இயக்குனர், இசை அமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் கே.பாக்கியராஜ். தமிழ்சினிமா உலகின் தந்தை டி.ராமானுஜம் அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பாக்கியராஜ் இப்படி பேசினார்.
பாக்கிராஜிடம் ஒரு முறை டி.ஆர். (டி.ராமானுஜம்) இப்படி சொன்னாராம். ‘வாக்கு கொடுக்குறது பெரிசு இல்ல. அதைக் காப்பாத்தணும். அப்படி முடியாதபட்சத்தில் முடிஞ்சவரைக்கும் காப்பாத்துறேன்னு சொல்லி வைக்கணும்’ என்று ஒரு ஆலோசனை சொன்னாராம். ஏன்னா அந்தக் காலத்துல அந்த 7 நாள்கள் தயாரிப்பாளர்கள் எங்களுக்கு தான் அடுத்த படம் பண்ணனும்னு கேட்டார்களாம்.
இதையும் படிங்க… ஒரு வழியா புளியங்கொப்பா பிடிச்சிட்டாரே.. திருமணத்திற்கு தயாரான அனுஷ்கா!
அப்புறம் பாக்கியராஜ் அதுக்கு வாக்கு கொடுத்ததும் அவர்கள் கொஞ்சம் பின்வாங்கி விட்டார்களாம். அதன்பிறகு வாக்கு எங்கேயோ வேறு பக்கமா போயிடுது என்கிறார் பாக்கியராஜ். இந்த மாதிரியான சூழல்ல டி.ஆரோட ஆலோசனை கைகொடுக்கிறது என்றும் சொல்கிறார்.
ஒரு தடவை கங்கை அமரன் வந்து பாக்கியராஜிடம், ‘என்னண்ணே எனக்கு ஏதாவது ஒரு படம் கொடுங்கண்ணே’ன்னு கேட்டாராம். அதுக்கு ‘அடுத்த படத்துக்கு நீ தான் அமர்’னு பாக்கியராஜ் வாக்கு கொடுத்துட்டாராம். ஆனா அது ஏவிஎம்மோட படைப்பு. அதுல இளையராஜாவா போட்டா நல்லாருக்குமேன்னு அவங்களோட எண்ணம்.
அதனால பாக்கியராஜிடம் சரவணன் சார் சொல்ல இல்ல நான் அமருக்கு வாக்குக் கொடுத்துட்டேன்னு சொல்லிட்டாராம். அதுக்கு அப்புறமா அமரன்கிட்ட போயி அவங்க பேசிருக்காங்க. அந்த உடனே கங்கை அமரன், இந்தப் படத்தை அண்ணனே பண்ணட்டும்னு பாக்கியராஜிடம் சொல்ல ஏன் என்னாச்சுன்னு கேட்டாராம். இல்ல சரவணன் சார் எல்லாம் நேரடியா வந்து எங்கிட்ட கேட்டாங்க.
‘உனக்கு 2 படம் தரேன்னும் சொன்னாங்க. அவங்களே கேட்கும்போது நாம என்ன சொல்றது? அதனால இந்தப் படத்தை அண்ணனே பண்ணட்டும்’ என்றாராம் கங்கை அமரன். அப்புறம் என்ன செய்யறதுன்னு பாக்கியராஜூம் இளையராஜாவிடம் போய் கேட்க, அவர் மறுத்துவிட்டாராம். ‘நீ முதல்ல அமருக்கிட்ட தானே போன. அங்கேயே போ’ன்னு சொல்லிட்டாராம். அப்புறம் ரொம்ப சமாதானம் எல்லாம் செஞ்சி தான் இளையராஜாவை அந்தப் படத்துக்கு மியூசிக் போட வைச்சாராம் பாக்கியராஜ். அதுதான் முந்தானை முடிச்சு. பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம்.