ஒரு வழியா புளியங்கொம்பா பிடிச்சிட்டாரே.. திருமணத்திற்கு தயாரான அனுஷ்கா!

Actress Anushka: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. உண்மையான லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இவருக்குத்தான் பொருந்தி இருக்கும். ஆனால் இடையில் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் அந்த வாய்ப்பை இழந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு நடிகைகளை பொறுத்த வரைக்கும் அனுஷ்கா நடிப்பிலும் சரி அழகிலும் சரி மிகவும் திறமை வாய்ந்த நடிகையாக தான் இருந்து வந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு டாப் நடிகையாகவே இருந்தார். அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி, பாகமதி போன்ற படங்களின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை தனது கண்ட்ரோலில் வைத்திருந்தார் அனுஷ்கா. பிறகு உடல் பருமன் ஏற்பட்டு அதை குறைக்க முடியாமல் திணறிய அனுஷ்கா அதன் மூலம் பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பை இழந்தார்.

இதையும் படிங்க: இனிமே அவர் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது… திடீரென விஜயகாந்துக்காக பேசிய சூப்பர்ஸ்டார்…

இன்னும் ஒரு வைராக்கியத்துடன் தான் இருக்கிறார். வெப்சீரிசிலும் நடித்து வருகிறார். ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் தனது உடல் எடையை படத்தின் கதைக்காக ஏற்ற அதுவே அவருக்கு வினையாகி போனது. இந்த படத்திற்கு பிறகு தான் அவரது உடல் மேலும் பெருத்து போய்விட்டது. 40 வயதை கடந்த அனுஷ்கா இன்னும் திருமணம் ஆகாமல் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் அவருடைய திருமண செய்தி பற்றிய ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் கூடிய சீக்கிரமே கன்னட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்ய போவதாக பரவி வருகிறது. அதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. நடிப்பில் முன்பு மாதிரி இன்னும் தனது மார்க்கெட்டை தக்க வைக்க முடியாது என்ற காரணத்தால் திருமணம் செய்து செட்டிலாகி விடலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறார் போல அனுஷ்கா.

இதையும் படிங்க: ஜெயலலிதான் ஃபர்ஸ்ட்!.. எம்.ஜி.ஆர் செய்த வேலை!. கோபத்தில் வெளியேறிய நடிகை!…

 

Related Articles

Next Story