இனிமே அவர் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது… திடீரென விஜயகாந்துக்காக பேசிய சூப்பர்ஸ்டார்…

Vijayakanth: ரஜினிகாந்த் மறைந்த நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் குறித்து பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களும் வாவ் சொல்ல தொடங்கி இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் கலராக இருந்தால் தான் ஹீரோ என்ற அடையாளத்தினை உடைத்தவர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் தான். கருத்த நிறத்தில் தங்கள் நடிப்பில் மாஸ் கட்டி கவர்ந்தனர். இருவருமே சமகால நடிகர்கள் இல்லை என்றாலும் ரஜினி உச்சத்தில் இருக்கும் போது சினிமாவுக்கு வந்தவர் விஜயகாந்த். சூப்பர்ஸ்டாராக அவர் அடையாளப்படுத்தப்பட விஜயகாந்துக்கு புரட்சி கலைஞர் பட்டம் கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை அசிங்கமாக திட்டிய சக நடிகர்!.. பல வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!…

சினிமாவில் ரஜினிகாந்த் வளர தன்னுடைய உச்சத்தில் அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்தார் விஜயகாந்த். சரியாக வளர வேண்டிய நேரத்தில் அவருக்கு உடல்நலமில்லாமல் போனது. பல வருடங்களாக சிகிச்சையில் இருந்த விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இயற்கை எய்தினார். அவர் இறுதி அஞ்சலியில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வந்து வழி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இன்றளவும் அவர் சமாதிக்கு பல நூறு மக்கள் தினமும் வந்த வண்ணம் இருக்கின்றனர். அவருக்கு சமீபத்தில் மத்திய அரசு பத்மபூஷண் விருதை அளித்திருந்தது. இதை அவர் மனைவி பிரேமலதா வாங்கி இருந்தார். இந்த நிகழ்வுக்கு வாழ்த்து சொல்லும் பொருட்டு ரஜினிகாந்த் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில், என்னுடைய அருமை நண்பர், அமரர் கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம விருதை மத்திய அரசு கொடுத்து சிறப்பு செய்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பாணியில் கதை சொல்லி ராமராஜனை சம்மதிக்க வைத்த பிரபலம்!.. அட அந்த படமா?!…

அது ரொம்ப மகிழ்ச்சி. மேலும், இந்திய நாட்டின் பத்மா அவார்ட்ஸ் 24 புத்தகத்தில் அவர் வரலாற்றை பதிவு செய்து இருக்கின்றனர். இது அவருக்கு மேலும் பெருமை. விஜயகாந்த் இங்கு இல்லை என்பதை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. அவர் டக்குனு தோன்றி பல சாதனைகளை செய்து மறைந்துவிட்டார். இனிமே அவரை மாதிரி ஒருவரை பார்க்க முடியாது. நான் அவரை ரொம்ப மிஸ் செய்கிறேன். மதுரையில் தோன்றிய மதுரை வீரன் அவர் கேப்டன் விஜயகாந்த் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவைக் காண: https://twitter.com/kayaldevaraj/status/1790927017296163326/video/1

 

Related Articles

Next Story