எம்.ஜி.ஆரை அசிங்கமாக திட்டிய சக நடிகர்!.. பல வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!...

60,70களில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். ஆனால், அந்த இடத்தை பிடிப்பதற்கு முன் அவர் பல அவமானங்களை சந்தித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. 7 வயதில் நாடக உலகில் நுழைந்து 30 வருடங்கள் பல நாடகங்களில் நடித்தார்.

அதன்பின் 37 வயதில் சினிமாவில் நுழைந்தார். ஆனாலும், ஹீரோ வாய்ப்பு என்பது அமையவில்லை. அப்போது ரஞ்சன், தியாகராஜ பகவாதர், மகாலிங்கம் என பல நடிகர்கள் முன்னணி ஹீரோக்களாக இருந்தார்கள். எனவே, அவர்கள் ஹீரோவாக நடிக்கும் படங்களில் சின்ன வேடத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பார். இப்படி 10 வருடங்கள் ஓடியது.

இதையும் படிங்க: வாய் இருக்குங்கிறதுக்காக இப்படியெல்லாமா பேசுவீங்க? திடீரென ஜிவி போட்ட பதிவு.. ரொம்ப நொந்துட்டாரே

அதன்பின் ராஜகுமாரி படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அதன்பின் பல வருடங்கள் எம்.ஜி.ஆர் நாடகங்களிலும் நடித்து வந்தார் என்பது பலருக்கும் தெரியாது. சினிமாவை விட நாடகங்களில்தான் எம்.ஜி.ஆருக்கு அதிக அனுபவம். ஆனாலும், சினிமா கலையை நன்றாக கற்றுக்கொண்டு அதிலும் சிறந்து விளங்கினார்.

எம்.ஜி.ஆர் நாடகங்களில் நடித்துகொண்டிருந்தபோது அவருடன் நடித்தவர் பசுபதி. இவர் முன் கோபக்காரார். கோபம் வந்துவிட்டால் யார் என்றெல்லாம் பார்க்க மாட்டார். வாய்க்கு வரும் கெட்டவார்த்தைகளில் திட்டுவார். ஒருமுறை எம்.ஜி.ஆருக்கும், பசுபதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அறுவறுப்பான வார்த்தைகளால் பசுபதி எம்.ஜி.ஆரை திட்டிவிட்டார். இதனால் கோபமடைந்த எம்.ஜி.ஆர் ‘இனிமேல் உன் முகத்தையே பார்க்க மாட்டேன்’ என சொல்லிவிட்டு அவரின் நட்பை துண்டித்துக்கொண்டார்.

இதையும் படிங்க: நான் நடிச்சிருந்தா இன்னிக்கு அந்த ஹீரோ இருந்திருக்க மாட்டார்! நகுல் சொன்ன நடிகர் யார் தெரியுமா?

அதன்பின் எம்.ஜி.ஆர் சினிமாவில் நுழைந்து பெரிய நடிகராக மாறி பணம் சம்பாதித்து நல்ல நிலைமைக்கு வந்தார். ஒருநாள் பசுபதி தனது பத்திரிக்கையை எம்.ஜி.ஆரிடம் கொடுத்துவிட்டு போனார். அதுவும் பேசாமல் பத்திரிக்கையை வாங்கி கொண்ட எம்.ஜி.ஆர் தனது உதவியாளரிடம் பசுபதியை பற்றி விசாரிக்க சொன்னார்.

அதில், பசுபதி வறுமையில் வாடுவதை தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர் மண்டப வாடகை முதல் மைக் செட் வரை திருமணத்திற்கான ஆகும் மொத்த செலவுக்கான பணத்தையும் தனது உதவியாளர் மூலம் கொடுத்து அனுப்பினார் எம்.ஜி.ஆர். அதோடு மட்டுமில்லாமல் சீர்வரிசை பாத்திரங்களோடு திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு வந்தார்.

 

Related Articles

Next Story