Cinema History
சிவாஜி படத்தில் நாகேஷூக்கு வந்த சிக்கல்… ஆனா எம்ஜிஆரோ அந்த விஷயத்துல கில்லாடி..!
நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ் தமிழ்த்திரை உலகில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் பல நடிகர்களுடைய படங்களிலும் ஒரே சமயத்தில் நடிப்பாராம். அப்போது அவருக்குப் பலவிதமான சிக்கல்கள் வந்ததுண்டு. ஏன்னா படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் அவரால் கலந்து கொள்ள முடியாது. அந்த மாதிரி நேரங்களில் அவர் எப்படி சமாளித்தார் தெரியுமா? வாங்க, பார்க்கலாம்.
இதையும் படிங்க… கமல் கேட்ட அந்தக் கேள்வி… ராமானுஜம் சொன்ன பதில்… பாலுமகேந்திரா எடுத்த முயற்சி
நாகேஷ் ஒரு நாளைக்கு 5 படங்கள் வரை படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம். ஒரு படப்பிடிப்பு அவருக்கு 2 மணி நேரத்தில் முடிந்து விடும். அதனால் அவருக்காக எல்லா நடிகர்களும் காத்துக் கொண்டு இருப்பார்களாம். பெரிய நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜியும் கூட இப்படிக் காத்துக்கொண்டு இருப்பாராம். இது போன்ற பெரிய நடிகர்களை இது மாதிரியான நேரங்களில் எப்படி சமாளிப்பீர்கள் என ஒருமுறை பத்திரிகை நிருபர் நாகேஷிடம் கேட்டாராம்.
அதற்கு இந்த இரண்டு பேர்களில் சிவாஜியை சமாளக்கிறது தான் ரொம்ப கஷ்டம். ஏன்னா காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் அவர் காலை 6.50 மணிக்கே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார். மிகச் சரியான நேரத்திற்கு வரும் அவரது படப்பிடிப்புக்குத் தாமதமாகப் போனால் அவரது மனநிலை எப்படி இருக்கும்? ஆனாலும் அந்தக் கோபத்தை எல்லாம் மனதிலே வைத்துக் கொள்வாரே தவிர சிவாஜி அதை நேரடியாக வெளிப்படுத்த மாட்டாராம்.
இதையும் படிங்க… ஓவராக உண்மையை உடைக்கும் சுசித்ரா… வாயை திறக்காமல் இருக்கும் பிரபலங்கள்… ரகசியம் சொன்ன பிரபலம்!
டிபன் சாப்பிடும்போது லேசாகக் கிண்டலோடு நான் தாமதமாக வந்ததைப் பற்றிச் சொல்வார் என்கிறார் நாகேஷ். ஆனால் எம்ஜிஆர் அப்படி அல்ல. அவருக்கு என்னோட நிலையும் தெரியும். நான் தாமதமாக வருவேன் என்பது பற்றியும் தெரியும். அவரைப் பொருத்தவரை ஒரு நடிகர் என்பது மட்டுமல்ல. இயக்குனர் என்பதால் அந்தக் காட்சியில என் சம்பந்தப்பட்ட ஷாட்டுகளை மட்டும் தவிர்த்து விட்டு, மற்ற ஷாட்டுகளை எல்லாம் படமாக்கச் சொல்லி அந்த இயக்குனரிடம் அவர் சொல்லி விடுவார். அதனால அவருடைய படப்பிடிப்புகளில் நான் பெரிய பிரச்சனையை சந்தித்தது இல்லை என்று பதில் அளித்தாராம் நாகேஷ்.
மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.