12 வயலின்.. 10 ஆயிரம் சம்பளம்!.. இளையராஜா போட்ட கிளாசிக் பாடல்கள்!.. அட அந்த படமா?!…

Published on: May 19, 2024
ilayaraja
---Advertisement---

அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர்தான் இசையமைப்பாளர் இளையராஜா. மண்வாசனை கலந்த இவரின் இசை பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. 80களில் எண்ணற்ற படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ் சினிமா ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்டார்.

இளையராஜா இசை இல்லை என்றால் படம் ஓடாது என்கிற நிலையும் அப்போது இருந்தது. எனவே, படத்தை துவங்கும்போதே இளையராஜாவுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிடுவார்கள். ஒன்றும் இல்லாத மொக்கை படங்களையும் இளையராஜா தனது பாடல்கள் மூலம் வெற்றி பெறச்செய்துவிடுவார்.

இதையும் படிங்க: இளையராஜா காப்பி அடித்த பாடல்கள்… பாக்கியராஜ் கங்கை அமரனுடன் சேர்ந்தது இதற்குத் தானா..?!

அதேபோல், இளையராஜா போல பின்னணி இசை அமைக்கும் ஒரு இசையமைப்பாளர் எங்குமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு பின்னால் பல இசையமைப்பாளர்கள் வந்துவிட்டாலும் இன்னமும் அவரின் இடம் காலியாகவே இருக்கிறது. 80களில் இருந்த ரஜினி, கமல் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களும் ராஜாவின் இசையை நம்பி இருந்தனர்.

இப்போது இளையராஜா தனது பாடல்களை தன்னுடைய அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என காப்புரிமை வழக்கு தொடர்ந்திருக்கிறார். எனவே, அவரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், 80களில் பல திரைப்படங்களுக்கு குறைவான சம்பளம், சில படங்களுக்கு சம்பளமே வாங்காமல் கூட அவர் இசையமைத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது.

sigappu rojakkal

இயக்குனர் பாரதிராஜா இளையராஜாவின் நெருங்கிய நண்பர். இவர்கள் இருவருமே திரைத்துறையில் ஒன்றாக வளர்ந்தவர்கள். பாரதிராஜாவின் படங்களுக்கு அற்புதமான பாடல்களை இளையராஜா கொடுத்திருக்கிறார். பாரதிராஜாவால் கிராமத்து படங்களை மட்டுமே எடுக்க முடியும் என திரையுலகினர் பேசியதால் அவர் கோபப்பட்டு எடுத்த படம்தாம் ‘சிகப்பு ரோஜாக்கள்’.

மிகவும் குறுகிய நாட்களில் இப்படத்தை எடுத்தார் பாரதிராஜா. இந்த படத்திற்காக இளையராஜா வாங்கிய சம்பளம் வெறும் 10 ஆயிரம் மட்டுமே. அதோடு, 12 வயலின் மற்றும் 2 செல்லோ இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு முழு படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் இளையராஜா. இது எந்த இசையமைப்பாளரும் செய்யாத சாதனை ஆகும்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.