Cinema History
நான் செகண்ட் ஹீரோவா?!.. விஜயகாந்த் படத்தில் நடிக்க மறுத்த ராமராஜன்!..
80களின் இறுதியில் தமிழ் சினிமாவில் இயக்குனராக நுழைந்தவர்தான் ராமராஜன். 4 திரைப்படங்களை இயக்கிவிட்டுத்தான் நடிகராக மாறினார். ராமராஜன் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் நம்ம ஊரு நல்ல ஊரு. இந்த படத்தை இயக்கியவர் வி.அழகப்பன். இந்த படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக ரேகா நடித்திருந்தார்.
அதன்பின் தொடர்ந்து ராமராஜன் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. எம்.ஜி.ஆருக்கு பின் கிராம பகுதிகளில் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக ராமராஜன் மாறினார். இதை புரிந்துகொண்டு தொடர்ந்து கிராமத்து கதைகளிலேயே அதிகம் நடித்தார் ராமராஜன். ராமராஜன் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருடக்கணக்கில் ஓடியது.
இதையும் படிங்க: இளையராஜாவிடம் அடம்பிடித்த ராமராஜன்.. சாமானியன் படத்துல யாருமே பார்க்காத ஒண்ணு இருக்காம்!
1986 முதல் 1996 வரை ராமராஜனின் கொடி கோலிவுட்டில் பறந்தது. பத்து வருடங்களில் பல ஹிட் படங்களை கொடுத்தார். அதன்பின் அவரின் படங்கள் எடுபடவில்லை. சில படங்களை இயக்கி நடித்தார். ஆனால், ஓடவில்லை. கடைசியாக 2012ம் வருடம் மேதை என்கிற படம் வெளியானது. அதுவும் ஓடவில்லை.
மனைவி நளினியை விவாகரத்து செய்தது, அரசியலில் நுழைந்தது, விபத்தில் சிக்கியது என பல காரணங்களால் கடந்த 12 வருடங்களாக ராமராஜன் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. செகண்ட் ஹீரோ, வில்லன், ஹீரோவின் அண்ணன் என பல வாய்ப்புகள் வந்தாலும் அவர் அதை ஏற்கவில்லை.
இதையும் படிங்க: மணிரத்னம் படம்.. ஜோடி ஸ்ரீதேவி.. வாய்ப்பை தவறவிட்ட ராமராஜன்… மனுஷன் இப்படியா இருப்பாரு!..
இப்போது சாமானியன் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார். எனவே, இப்படத்தை புரமோஷன் பண்ணும் விதமாக பல ஊடகங்களிலும் தொடர்ந்து அவர் பேட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில், விஜயகாந்துடன் இணைந்து நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் என்னை ஹீரோவாக நடிக்க வைத்த என் குருநாதர் அழகப்பன் அடுத்து இயக்கிய படம் ‘பூமழை பொழியுது’. என்னை அழைத்து ‘சிங்கப்பூர் போகணும் கிளம்பு’ என்றார். அதோடு, நதியா கதாநாயகி என்றார். எனக்கு ஒரே மகிழ்ச்சி. படத்தில் நீ, விஜயகாந்த், நதியா என்றார். அப்போதுதான் நான் செகண்ட் ஹீரோ என்பது தெரிந்தது. என்னை ஹீரோ ஆக்குன நீங்களே இப்படி நடிக்க வைக்கலமா? என அவரிடம் கேட்டேன். அவர் புரிந்துகொண்டார். அதன்பின் அந்த வேடத்தில் சுரேஷ் நடித்தார்’ என ராமராஜன் கூறியிருந்தார்.