Cinema History
ஜெமினியை தன்னுடன் நடிக்க வைக்க விரும்பாத எம்ஜிஆர்! இப்படிலாமா யோசிப்பாரு நம் பொன்மனச்செம்மல்?
MGR Gemini Ganesan: தமிழ் திரையுலகில் முடி சூடா மூவேந்தர்களாக இருந்தவர்கள் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன். இவர்களில் மூவருக்குமே ஒரு அடைமொழி உண்டு. எம்ஜிஆரை வீரத் திலகம் என்றும் சிவாஜியை நடிகர் திலகம் என்றும் ஜெமினியை காதல் மன்னன் என்றும் அந்த காலங்களில் அழைத்து வந்தார்கள்.
அந்த அளவுக்கு அவர்களின் அடைமொழிக்கு ஏற்ப அவர்களின் கதாபாத்திரங்கள் படங்களில் வெளிப்படும். ஜெமினியை பொருத்தவரைக்கும் அவர் நடித்த பெரும்பாலான படங்களில் ஒரு காதல் ஹீரோவாகவே வலம் வந்தார். அதற்கேற்றார் போல் அந்த காலங்களில் பல நாயகிகளின் கனவு நாயகனாகவும் திகழ்ந்து வந்தார். இதில் எம்ஜிஆரும் ஜெமினி கணேசனும் இணைந்து நடித்த முகராசி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: கல்யாண நாளில் கலகம் செய்ய வரும் சத்யா… ஓவரா பேசும் மனோஜ்… வயித்தெரிச்சலா இருக்கே!
1966 ஆம் ஆண்டு வெளியான இந்த முகராசி திரைப்படத்தை திருமுகம் என்பவர் இயக்கியிருந்தார். இதில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நடிக்க ஜெமினிகணேசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. எம்ஜிஆரை பொறுத்த வரைக்கும் அவருக்கு என ஒரு தனி கொள்கைகள் இருந்து வந்தன.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஜெமினியுடன் எம்ஜிஆர் இணைந்து நடிக்கவே இல்லை. அதற்கான காரணம் என்ன என விசாரித்த போது பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் ‘எம்ஜிஆரை பொறுத்தவரைக்கும் அந்த காலத்தில் தனக்கு இணையாக ஒரு நடிகர் பிரபலமானால் அவருடன் இணைந்து நடிப்பதை எம்ஜிஆர் தவிர்த்து விடுவார்’ எனக் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: இளையராஜாவை அவமானப்படுத்திய பாலச்சந்தர்!.. இருவரும் பிரிந்ததன் உண்மையான காரணம் இதுதான்!..
இதன் காரணமாகவே முகராசி திரைப்படத்திற்கு பிறகு ஜெமினியுடன் எம்ஜிஆர் இணைந்து நடிக்கவே இல்லை என சித்ரா லட்சுமணன் கூறினார். இது மட்டுமல்ல. எம்.ஜி.ஆரின் படங்களை பொறுத்தவரைக்கும் ஒரு தனி பாலிசி இருக்கும். அதற்குள் யாரும் உள்ளே குறுக்கே வராதவாறு எம்ஜிஆர் பார்த்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.