Connect with us

Cinema News

கல்யாண நாளில் கலகம் செய்ய வரும் சத்யா… ஓவரா பேசும் மனோஜ்… வயித்தெரிச்சலா இருக்கே!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து மற்றும் மீனா இருவரின் கல்யாண நாளை குடும்பத்தினர் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். கேக் வெட்டியதும் ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் இணைந்து ஒரு பரிசை அவர்களுக்கு கொடுக்கின்றனர். அதை முத்து பிரித்துப் பார்க்க கோயிலில் தாலி கட்டிய போது எடுத்த படம் என்பதால் சந்தோஷப்படுகிறார்.

பின்னர் ஒரு வருஷம் ஆச்சு இவங்கள தம்பதியா எப்படி புரிஞ்சு வச்சிருக்கீங்கன்னு எல்லாரிடமும் கேட்க ஆரம்பிக்கிறார். ஸ்ருதி வீடியோவை ஆன் செய்து கொள்ள மனோஜிடம் முதலில் கேட்கிறார். இவங்க ரெண்டு பேரும் எனக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். நான் போனதுனால தானே இவனுக்கு கல்யாணம் நடந்துச்சு. இல்லன்னா இவனுக்கு யார் பொண்ணு கொடுப்பா என்ன நக்கலாக பேசுகிறார்.

இதையும் படிங்க: நான் செகண்ட் ஹீரோவா?!.. விஜயகாந்த் படத்தில் நடிக்க மறுத்த ராமராஜன்!..

இதைக் கேட்ட ரோகிணி மற்றும் விஜயா இருவரும் சிரிக்கின்றனர். பின்னர் ரோகிணியிடம் கேட்க பொண்டாட்டி தான் புருஷனை திருத்தணும். அடுத்த வருஷமாவது முத்து திருந்துவாரான்னு பார்க்கலாம் எனப் பேசுகிறார். பின்னர், ஸ்ருதி இந்த வீட்ல எனக்கு சப்போர்ட் மீனாதான். அவங்களால தான் எனக்கு கல்யாணம் நடந்துச்சு. ஆனா இந்த கல்யாண வாழ்க்கையில நானா இருந்தா ஒரு வருஷம் கூட தாண்டி இருப்பேனான்னு தெரியாது.

மீனா ஸ்ட்ராங்கான பெண் என்பதால் இது நடந்திருக்கு. முத்து கொஞ்சம் மாறிட்டா இன்னும் நல்லா இருக்கும் எனப் பேசுகிறார். ரவி பேசும்போது, சின்ன வயசுல இருந்து பார்த்த முத்துவும் கடந்த ஒரு வருஷமா பார்க்கிற முத்துவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. எல்லா அண்ணியாலதான். ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர் என்கிறார். இதை கேட்டு மீனா மற்றும் முத்து இருவரும் சந்தோஷப்படுகின்றனர். அண்ணாமலை பேசும் போது இவங்க கல்யாணம் தர்ம சங்கடமான ஒரு சூழலில் தான் நடந்துச்சு.

ஆனா ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுக்காமல் நல்ல வாழ்க்கையை வாழறாங்க என பாராட்டுகிறார். விஜயா பேசும் போது இவங்கள பத்தி பேச என்ன இருக்கு. ரெண்டு பேரும் ஜாடிக்கேத்த மூடிதான்.  அவன் முழம் பேசினால் இவ ஜான் பேசுவா. பூக்கடை வெச்சி இந்த தெரு முழுசும் பேமஸ் ஆயிட்டா. என்ன பிரச்சனை வந்தாலும் இதுக்கு தானே நிக்கிறா. சின்ன புள்ள மாதிரி ரெண்டு பேரும் சண்டை போட்டு இருப்பாங்க ஆனா உடனே சேர்ந்துப்பாங்க என அவரை அறியாமலேயே மீனாவை பற்றி பெருமையாக பேசுகிறார்.

இதையும் படிங்க: சோனியா அகர்வால் என்ட்ரி!.. குக் வித் கோமாளியை ஒரே எபிசோடில் ஓரங்கட்டிய டாப் குக் டூப் குப்!..

பின்னர் முத்து பேசும்போது, முதலில் எனக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லாம தான் இருந்துச்சு. போகப் போக மீனாவால நானும் மாறினேன். அது எனக்கும் பிடித்தது. அடங்காத கால ஒருத்தருக்கு மட்டும் அடங்குற மாதிரி. என் வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் மீனாவால் தான் என பெருமையாக பேசுகிறார். இதை தொடர்ந்து மீனா பேசும்போது, முதலில் எனக்கும் பயமா தான் இருந்துச்சு.

ஆனால் எங்க அம்மாவும் மாமாவும் நல்ல வாழ்க்கையை தான் எனக்கு அமைச்சு கொடுத்திருப்பாங்கன்னு நம்புனேன். இவரோட குணம் இப்ப மாறல பாதியில தான் மாறி இருக்கு என மீனா பேச அண்ணாமலை, விஜயா, முத்து, மனோஜின் முகங்கள் மாறுகிறது. அத பத்தி மட்டும் அவர் என்கிட்ட பேசுனதே இல்லை. என்ன இன்னும் முழுசா ஒரு பொண்டாட்டியா ஏத்துக்கிட்டாரா தெரியல என்கிறார்.

மீனாவின் மனதை சரி செய்ய அப்ப நீ எனக்கு முக்கா பொண்டாட்டியாவே இரு என கலாய்க்கிறார். பின்னர் மீனாவின் அம்மா பேச தொடங்க அந்த நேரத்தில் அங்கு வந்து நிற்கிறார் சத்யா. இதை பார்த்து எல்லோரும் கலக்கத்துடன் நிற்க கோபத்துடன் முத்து சண்டைக்கு போக அவரை பிடித்து நிறுத்துகிறார் மீனா. இதனுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

இதையும் படிங்க: கார்த்திக் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடித்து பேர் வாங்கிய முரளி! நடிக்காததற்கு இதுவா காரணம்?

google news
Continue Reading

More in Cinema News

To Top