Connect with us

Cinema News

கூலி படத்தில் அந்த நடிகர் இல்லையாம்!.. பேன் இண்டியாவுக்கு வந்த ஆப்பு!.. அப்செட்டில் லோக்கி!…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து உருவாகவுள்ள திரைப்படம்தான் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. ரஜினி இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கி வருகிறார்.

இந்த படம் முடிந்தபின் கூலி படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் இது. தயாரிப்பாளர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே லியோ படத்தின் 2ம் பாதியை வேகமாக எடுத்ததாகவும், இனிமேல் அந்த தவறை செய்ய மாட்டேன் என லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: உள்ளுக்குள்ள இப்படி ஒரு பிரச்சினை! சிம்பு ஊறுகாவா? தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி விலக இதுதான் காரணமா?

அதோடு, வழக்கமாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் எல்.சி.யூ என்கிற விஷயம் இருக்கு. லியோ படத்தில் கூட அது இருந்தது. ஆனால், கூலியை பொறுத்தவரை இது முழுக்க முழுக்க புதிய கதை. இதில் எல்.சி.யூ என்பதெல்லாம் கிடையாது என லோகேஷ் கனகராஜ் சொல்லி இருக்கிறார்.

 

சமீபகாலமாகவே பெரிய நடிகர்களின் படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் வெளியாகும் பேன் இண்டியா படங்களாகவே உருவாகி வருகிறது. ரஜினியின் ஜெயிலர் படம் கூட அப்படித்தான் உருவானது. அதனால்தான் மலையாளத்திலிருந்து மோகன்லால், தெலுங்கிலிருந்து சுனில், கன்னடத்திலிருந்து ராஜ்குமார் என எல்லோரையும் இப்படத்தில் நடிக்க வைத்தனர்.

இதையும் படிங்க: என்னது விஜய்க்கு மருத்துவ பரிசோதனையா? அப்போ முதல்வர் கனவு.. சுசித்ராவால் தளபதிக்கு வந்த ஆபத்து

சன் பிக்சர்ஸ் நிறுவனம் எதிர்பார்க்காத வகையில் இப்படம் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதுபோலவே கூலி படமும் பேன் இண்டியா படமாகவே உருவாகவிருக்கிறது. எனவே, இந்த படத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூரிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

ranveer

ஆனால், சம்பளமா இல்லை கால்ஷீட் இல்லையா என்ன பிரச்சனை என தெரியவில்லை. எனவே, வேறொரு ஹிந்தி நடிகரை நடிக்க வைக்கும் முயற்சியில் லோகேஷ் ஈடுபட்டிருக்கிறார் என செய்திகள் கசிந்திருக்கிறது. பொதுவாக பாலிவுட் நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பார்கள். ஆனால், ரஜினிக்கே சம்பளத்தை குறைத்து கொடுத்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top