Cinema News
புகழில் ஊழல் செய்யும் கவின்… இதெல்லாம் ரொம்பவே ஓவரா இருக்கு… விளாசி தள்ளும் பிரபலம்!…
Kavin: தொலைக்காட்சியில் இருந்து நடிக்க வந்தால் பெரிய புகழை அடைவது கஷ்டம் என்ற வார்த்தையை உடைத்தது முதலில் சிவகார்த்திகேயன். அதன்பின் தற்போது அந்த இடத்தை பிடிக்க நடிகர் கவின் பெரிய அளவில் போராடி வருகிறார். ஆனால் இதில் பெரிய உள்குத்து இருப்பதாக பிரபல திரைவிமர்சகர் தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் சில சீரியல்கள் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் கவின். ஆனால் இந்த சீரியல்கள் கொடுத்த புகழை விட அவர் சென்ற பிக் பாஸ் தமிழ் சீசன் பெரிய அளவில் அவருக்கு புகழை வாங்கி தந்தது. கிட்டத்தட்ட டைட்டிலை தட்டும் அளவில் அவருக்கான ரசிகர்கள் அதிகம் இருந்ததாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: ஆரம்பிச்சிட்டாங்க அலப்பறைய! ‘குக் வித் கோமாளி’யை கூண்டோடு காலிபண்ண இறங்கிய வடிவேலு
இருந்தும் டைட்டிலை வெல்லாமல் பணப்பெட்டியுடன் வீட்டிலிருந்து வெளியேறினார். வெளியில் வந்த கவினுக்கு சமூகவலைத்தளங்களில் பெரிய ஆதரவு இருந்தது. தொடர்ச்சியாக அவருக்கு சினிமா நடிக்கும் வாய்ப்புகளும் அமைந்தது. ஓடிடியில் ரிலீஸ் ஆன லிப்ட் சுமார் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வெளியான டாடா திரைப்படம் கவின் சினிமா கேரியரை மிகப்பெரிய அளவில் உயர்த்தியது.
தற்போது அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஸ்டார் திரைப்படம் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கவின் குறித்து தன்னுடைய பேட்டியில் பேசியிருக்கும் திரைவிமர்சகர் பிஸ்மி கூறும் போது, உண்மையில் கவின் வளர்ச்சி நிஜமானது இல்லை. இது எல்லாமே அவருடைய இணைய கூலிப்படைகளால் செய்யப்படுவது தான். பிக் பாஸில் உண்மையாக ஆர்மி இருந்தது ஓவியாவிற்கு தான்.
இதையும் படிங்க: அரண்மணை படத்தில் தமன்னா சம்பளம் இத்தனை கோடியா? அடங்கப்பா! பொண்ணு வெவரம் தான்!
ஆனால் கவின் உள்ளே செல்லும் போதே தனக்கான ஆர்மியை உருவாக்கி வைத்த பின்னரே உள்ளே சென்றார். அந்த இணைய கூலிப்படைகளை வைத்து தான் தற்போது தனக்கு புகழ் இருப்பதாக இணையதளங்களில் கவின் பரப்பி வருகிறார். ஸ்டார் படத்தின் வசூல் சுமாராக தான் இருக்கிறது. ஆனால் இவருடைய ஆட்கள் தான் அதை பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.