Lyiricist Vaali: வாலிபக் கவிஞர் வாலி. இவருடைய பல நாடகங்கள் இந்திய வானொலியில் ஒளிபரப்பாகின. சிறு வயதிலிருந்தே இவருடைய நாடகங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தனர். நேதாஜி என்ற கையெழுத்து பத்திரிகையையும் நடத்தி இருக்கிறார் வாலி. கவிஞர் என்பதையும் தாண்டி இவருக்குள் ஒரு சிறந்த ஓவியரும் ஒழிந்திருக்கிறார்.
இவருடைய ஆசையே ஓவியர் மாலி போல ஆக வேண்டும் என்பதுதான். அதனாலையே இவர் பெயரை வாலி என மாற்றிக் கொண்டார். இவருடைய இயற்பெயர் ரெங்கராஜன். இவரை இந்த தமிழ் சினிமாவிற்குள் அழைத்து வந்த பெருமைக்குரியவர் டி எம் சௌந்தர்ராஜன். அந்த காலத்தில் இரு பெரும் துருவங்களாக இருந்த எம் ஜி ஆர் சிவாஜி ஆகிய இருவருக்குமே வாலியை மிகவும் பிடிக்கும்.
இதையும் படிங்க: இனிமே மரண அடிதான்.. சூர்யா ரேஞ்சுக்கு மாறிய சூரி!.. கருடன் டிரெய்லர் சொல்வது என்ன?..
எம் ஜி ஆர் இவரை ஆண்டவனே என்று தான் அழைப்பாராம். சிவாஜி இவரை வாத்தியார் என்று அழைப்பாராம். காதல், தாலாட்டு, சோகம், குத்துப்பாட்டு, பக்தி பாடல் என இவரின் வரிகளில் வெளிவராத பாடல்களே இல்லை என்று சொல்லலாம். எம்ஜிஆர் முதல் தனுஷ் வரைக்கும் இவர் எழுதிய பாடல்கள் ஏராளம்.
கிட்டத்தட்ட 4 தலைமுறைகளுக்கு பாடல் எழுதிய ஒரு சிறந்த பாடலாசிரியர் வாலி. தமிழக அரசின் சிறந்த திரைப்பட பாடல் ஆசிரியராக ஐந்து முறை விருதை பெற்றவர். பத்ம விருது, பாரதி விருது, கலைமாமணி விருது போன்ற எண்ணற்ற விருதுகளையும் பெற்றவர். இவருடைய தத்துவ பாடல்களில் கண்ணதாசனின் சாயலும் இருக்கும்.
இதையும் படிங்க: ஷூட்டிங்கே இன்னும் தொடங்கல… பாலிவுட்டில் இருந்து சிம்புவுக்காக இறக்கப்பட்ட முன்னணி நடிகை…
அதைப்பற்றி தங்கத்துடன் தானே ஒப்பிடுகிறீர்கள்.. தகரத்துடன் இல்லையே என்று மிகப் பெருமையாக சொல்வாராம் வாலி .இப்படி லட்சக்கணக்கில் பாடல்களை எழுதிய வாலி தனது சம்பளத்தையும் லட்சங்களில் வாங்கி குவித்திருக்கிறார். ஆனால் இவருடைய முதல் சம்பளத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். இவருடைய முதல் சம்பளம் வெறும் 75 ரூபாய் தான். இந்த சுவாரசிய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.
