இதனால் தான் திடீரென வெளியானது குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக்… செம ஐடியா தான்!

Published on: May 21, 2024
---Advertisement---

GoodBadUgly: நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், அதுகுறித்த முக்கிய காரணம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் கடந்த வருடம் அவரது பிறந்த நாளில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரிய குழப்பத்தை தாண்டி படத்தின் படப்பிடிப்பு பல மாதங்கள் தள்ளிப்போய் கடந்த வருட கடைசி நாள் படப்பிடிப்பு தொடங்கியது. இருந்தும் அஜர்பைஜானில் நடந்த படப்பிடிப்பு தயாரிப்பு குழுவுக்கு பெரிய செலவு வைத்து விட்டதாகவே கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இனிமே மரண அடிதான்.. சூர்யா ரேஞ்சுக்கு மாறிய சூரி!.. கருடன் டிரெய்லர் சொல்வது என்ன?..

இதை தொடர்ந்து விசா பிரச்சினை, அஜர்பைஜானியின் காலநிலை என பல பிரச்சனைகள் உருவெடுத்தது. இதனால் படக்குழு பலமுறை சென்று திரும்பியது லைக்கா நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பை தற்போது நடத்த முடியாமல் தயாரிப்புக் குழு முடக்கி வைத்திருக்கிறது. இனிமேல் விடாமுயற்சியை நம்பி பயனில்லை என நினைத்த அஜித் உடனே தன்னுடைய அடுத்த படத்தில் களம் இறங்கி இருக்கிறார்.

மார்க் ஆண்டனி வெற்றிக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடிக்க இருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இதில் அஜித் கேங்ஸ்டர் லுக்கில் இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவரின் நடிப்பில் வெளியான கடைசி சில படங்கள் எல்லாமே எலைட் லுக்கில் தான் இருந்தது. இதைத் தொடர்ந்து பல வருடம் கழித்து கலகலப்பான அஜித்தை மீண்டும் பார்க்கலாம் என ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர்.

இதையும் படிங்க: ஷூட்டிங்கே இன்னும் தொடங்கல… பாலிவுட்டில் இருந்து சிம்புவுக்காக இறக்கப்பட்ட முன்னணி நடிகை…

இந்நிலையில் எந்த நல்ல நாளும் இல்லாமல் குட்  பேட் அக்லி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதற்கு பின்னால் ஒரு வைரல் காரணம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. அங்கு படத்தின் செட்டை போட்ட 700 ஊழியர்கள் அஜித்திடம் செல்பி எடுத்துக் கொள்ள விரும்பினார்கள். 

 அவர்கள் கோரிக்கையை அஜித்தால் மறுக்க முடியாமல் போக அவரும் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடம் இருந்த அஜித்தின் படத்தின் லுக் கசிவதை படக்குழு விரும்பவில்லை. இதனாலே உடனே பர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.