தெலுங்கு நடிகர்களை கிண்டல் பண்ணும் விதமாக கமல் செஞ்ச ஒரு காரியம்! ஜனகராஜ் சொன்ன ரகசியம்

Published on: May 21, 2024
jana
---Advertisement---

Kamal Janagaraj: தமிழ் திரையுலகில் கவுண்டமணி செந்தில் இவர்கள் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தனர். இவர்கள் இல்லாத படங்களை நாம் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு நகைச்சுவையில் மிகப்பெரிய ஆளுமைகளாக இருவரும் இருந்து வந்தனர். சொல்லப்போனால் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே இவர்கள் கட்டி வைத்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.

அதே அளவுக்கு ஒரு புகழை பெற்ற மற்றொரு நகைச்சுவை நடிகர் ஜனகராஜ். தன்னுடைய பேச்சாலும் முக பாவனைகளாலும் இவர்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தனர். பல நடிகர்களுடன் நகைச்சுவையில் கலக்கி வந்த ஜனகராஜ் கமல் நடித்த பெரும்பாலான படங்களில் இவரை காண முடியும். குறிப்பாக நாயகன் திரைப்படத்தில் கமலுடன் படம் முழுக்க டிராவல் செய்து பெரும் வரவேற்பை பெற்றார்.

இதையும் படிங்க: மரியாதை கொடுக்காத சரோஜாதேவி!.. ஆனாலும் வாய்ப்பு கொடுத்து தூக்கிவிட்ட எம்..ஜி.ஆர்…

அதுவும் அந்த படத்தில் அமைந்த நிலா அது வானத்து மேலே என்ற பாடல் ஜனகராஜுக்காகவே வைக்கப்பட்ட பாடலாகவே அமைந்தது. அதனை அடுத்து சத்யா திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜனகராஜ். இந்த நிலையில் ஜனகராஜின் ஒரு பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அதாவது தெலுங்கு நடிகர்களை கிண்டல் பண்ணும் விதமாக கமல் செஞ்ச ஒரு காரியத்தை பற்றி ஜனகராஜ் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். திடீரென ஜனகராஜை பார்த்த கமல் சத்யா திரைப்படத்தில் நீ நாயுடுவாக நடிக்க வேண்டும் என கூறினாராம். அப்போது ஜனகராஜ் தலை நிறைய முடி இருந்ததாம். நாயுடு என்றால் இந்த மாதிரி இருக்கக் கூடாதே. இவ்வளவு முடியை என்ன பண்ணுவது என ஜனகராஜ் கேட்டாராம்.

இதையும் படிங்க: ரஜினி நாலாயிரம் மட்டும் சம்பளமா வாங்கி நடிச்சது இந்த படம்தான்! என்ன கேரக்டர்னு தெரியுமா?..

உடனே கமல் ஓடிப்போய் நிரோத்தை எடுத்து வந்து தலை முழுவதும் கவர் செய்து அதன் மேல் விக் வைத்து விட்டாராம். இப்போது பார்ப்பதற்கு நாயுடு மாதிரி தெரிகிறது என கூறினாராம் கமல். இதைப் பற்றி அந்த பேட்டியில் கூறிய ஜனகராஜ் இது தெலுங்கு நடிகர்களை கிண்டல் செய்வதற்காகவே கமல் செய்த ஒரு வேலை என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் ஜனகராஜ். ஏனெனில் அப்போதைய தெலுங்கு நடிகர்கள் பெரும்பாலும் இப்படித்தான் விக் வைத்து நடுத்திருப்பார்களாம். அதைப்போல அவர்களை கிண்டல் பண்ணும் விதமாக இந்த படத்தில் அந்த மாதிரி ஒரு காரியத்தை செய்தாராம் கமல்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.