Connect with us
aadhik

Cinema News

இவ்ளோ இளமையா மாறிட்டாரே! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அஜித்.. பக்காவா மாத்திட்டாரே ஆதிக்

Actor Ajith: தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி மிகவும் டிரெண்டாகிக் கொண்டு வருகின்றது. தற்போது அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது இந்த திரைப்படம்.

இதற்கிடையில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பும் பாதியிலேயே நின்றுவிட்டது. ஆனால் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நேரம் கிடைக்கும்போதெல்லாம் விடாமுயற்சி திரைப்படத்தையும் முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் அஜித்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரின் அரசியலை விமர்சித்த கண்ணதாசன்… அதுக்கு புரட்சித்தலைவர் கொடுத்த பதிலடியைப் பாருங்க..!

இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுவும் ஆதிக் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் அவருடைய ரசனைக்கு ஏற்ற மாதிரி அஜித்தை கண்டிப்பாக மாற்றுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். அதைப் போல இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதுவரை இல்லாத ஒரு கெட்டப்பில் அஜித்தை காண்பித்தது மிகவும் வித்தியாசமாக இருந்தது.

ajith

ajith

அதிலிருந்து இந்த படமும் அஜித்தின் கெரியரில் ஒரு வித்தியாசமான படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. அதில் அஜித் மிகவும் ஸ்டைலாக அதுவும் ஒல்லியான தோற்றத்துடன் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்த மாதிரி அந்த போட்டோவில் போஸ் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: வடிவேலுவுக்கும் டி.ராஜேந்திரனுக்கும் இப்படி ஒரு பந்தமா? இதையும் மறந்துட்டாரே வைகைப்புயல்

இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் இப்படி அஜித்தை ஆதிக் மாற்றுவார் என எதிர்பார்க்கவில்லை. தல இஸ் பேக் என ரசிகர்கள் தங்களது கமெண்டில் கூறி வருகிறார்கள். அதுவும் லைட்டான தாடியுடன் மிகவும் ஸ்லிம்மாக அஜித்தை இப்படி பார்ப்பதற்கு ஹேண்ட்சம்மாக இருக்கிறார் அஜித்.

Continue Reading

More in Cinema News

To Top