Cinema History
ராமராஜனின் தலைமுடியைப் பார்த்து கமல் அடித்த கிண்டல்… மனுஷன் குசும்புக்காரரா இருப்பாரோ?!
ராமராஜன் படம் அப்போது ரஜினி, கமல் படங்களுக்கு சவால் விட்டது. அந்த வகையில் எல்லா சென்டர்களிலும் ஒரு நடிகருக்கு மாஸ் என்றால் அது ராமராஜனாகத் தான் இருக்கும். அதனால் தான் அவர் ‘மக்கள் நாயகன்’ என்றும் அழைக்கப்பட்டார். இவர் வெறும் டவுசர் மட்டுமே போட்டு நடித்தாலும் படம் சூப்பர்ஹிட் தான். எங்க ஊரு பாட்டுக்காரன் தான் அதற்கு உதாரணம்.
இதையும் படிங்க… கமல்ஹாசனின் அடுத்த 2 மாத பிளான் இதானாம்.. இனிமே அதிரடி சரவெடி தான்…
கதையை மட்டுமே நம்பி படம் நடிப்பவர். அதனால் இவரது படங்கள் எல்லாமே ஹிட்டாகத் தான் இருக்கும். அதற்கு ஏற்ப இவரது படங்கள் என்றாலே இளையராஜாவின் பாடல்கள் அமர்க்களப்படுத்தி விடும். இதனால் படம் தயாரிப்பாளர்களின் கையைக் கடிக்காது.
ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அந்த நேரம் கமலின் அபூர்வ சகோதரர்கள் படம் ரிலீஸ். அப்போது கமல் ராமராஜனைப் பார்த்துக் கிண்டலுடன் இப்படி சொன்னாராம். ‘நான் கையைக் காலை எல்லாம் மடக்கிக் கட்டிக் கஷ்டப்பட்டு நடிக்கிறேன்.
ராமராஜன் ஈசியா கரகத்தைத் தலையில வச்சி ஆடிட்டுப் போயிட்டான்’னு சொன்னாராம். நான் கமல் சார் ஆபீஸ்சுக்குப் போனேன். அவருக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அவரோட பிறந்த ஊருக்கும், என்னோட பிறந்த ஊருக்கும் 60 கிலோ மீட்டர் தான் வித்தியாசம். கமல் சார போய் பார்க்கிறேன்.
இதையும் படிங்க… விஜயகாந்தை பற்றி கமல் எப்போதும் சொல்லும் ஒரு வார்த்தை! போட்டி நடிகர்களையே பிரமிக்க வைத்த கேப்டன்
‘வணக்கம் ராமராஜன்… வாங்க’ என்கிறார். ‘என்ன தலை முடி நிஜமா, விக்கா?’ன்னு கேட்கிறார். ‘நிஜமான முடி தான்’னு சொல்றார் மக்கள் நாயகன். ‘என்ன தலைமுடியைக் கூட விக் மாதிரி வச்சிருக்குற ஒரே ஆளு நீ தான்யா…’ன்னு சொல்றார். இல்ல சார் சின்ன வயசுல இருந்தே அப்படியே வச்சிப் பழகிட்டேன்னு சொன்னேன். அதே மாதிரி ரஜினி சார்.
அவரோட ‘மூன்று முடிச்சு’ படத்தில் இருந்து இன்னைக்கு வரைக்கும் அவருக்குன்னு ஒரு தனி ஸ்டைல் வச்சி நடிச்சிருக்காரு. இப்போ வேர்ல்டு லெவல்ல அவரு படத்துக்கு பிசினஸ் நடக்கு. இவ்வாறு ராமராஜன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.