‘சாமானியன்’ படத்தில் இளையராஜா வச்ச ட்விஸ்ட்! போடு.. இதுக்காகவே படம் ஹவுஸ்ஃபுல்தான்

Published on: May 23, 2024
ramarajan
---Advertisement---

Samaniyan Movie: மக்கள் நாயகன் ராமராஜன். நாளை அவருடைய நடிப்பில் 45ஆவது திரைப்படம் ஆன சாமானியன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட 23 வருடங்களுக்குப் பிறகு இசைஞானி இளையராஜாவும் ராமராஜனும் இணைந்து இருக்கும் படமாக இந்த சாமானியின் படம் அமைகிறது.

அதனால் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் ராகேஷ். 12 வருடங்களுக்குப் பிறகு சாமானியன் திரைப்படத்தின் மூலம் ராமராஜன் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதுவரை ஹீரோவாக நடித்து வந்த ராமராஜன் இந்த படத்திலும் ஹீரோ என்பதையும் தாண்டி கதையின் நாயகனாக ஜொலிப்பார் என்று படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க: இதுக்கு கரகாட்டக்காரன் காரே தேவலாம்!.. இந்த தகர டப்பா காருக்குத்தான் கீர்த்தி சுரேஷ் வாய்ஸா?..

மேலும் இந்த படத்தை பற்றி கூறிய ராகேஷ் ஒரு சமயம் இளையராஜா  ‘நானும் ராமராஜனும் இணைந்திருப்பதால் எங்கள் பாட்டுக்காகவே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதனால் இரண்டு பாடல்களை வைத்து கொள்வோம்’ என்றாராம்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ராமராஜன் கூறும் போது இந்த படத்திற்காக இளையராஜா தன்னை பாட வைத்திருக்கிறார் என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதாவது ராமராஜன் என்றாலே நம் நினைவுக்கு வரும் பாடல் செண்பகமே செண்பகமே என்ற பாடல் தான். அந்தப் பாடலில் ஒரு நான்கு வரிகளை படத்தில் ராமராஜன் பாடுவது போல இந்த காலத்திற்கு ஏற்ப அந்தப் பாட்டை உருவாக்கி இருக்காராம் இளையராஜா.

இதையும் படிங்க: நடு விரலை காட்ட சொன்ன ஆதிக்!.. அஜித் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?.. பிரபலம் சொன்ன பலே மேட்டர்!..

இதைப் பற்றி ராமராஜன் கூறும் போது இந்த  ‘நாலு வரியை நான் பாடவா வேண்டாமே’ என சொன்னாராம். இருந்தாலும் இளையராஜா வற்புறுத்தலின் பேரில் ஒரு நான்கு வரிகளை ராமராஜன் பாடியிருப்பதாக அந்த பேட்டியில் கூறினார். அதனால் இதுவே ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும் இந்த படத்தின் ரிசல்ட் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.