எம்.ஜி.ஆரின் ஆசையை நிறைவேற்றிய சிவாஜி… இடையில் வந்த சிக்கல்… தீர்த்து வைத்த புரட்சித்தலைவர்..

Published on: May 23, 2024
MGR, Sivaji
---Advertisement---

புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், நடிகர் திலகம் சிவாஜியும் நடிக்கும் போது தான் போட்டி போடுவர். அது ஆரோக்கியமான போட்டி. மற்றபடி நேரில் பழகும்போது அண்ணன், தம்பியாகத்தான் பழகுவர். எம்ஜிஆரை சிவாஜி எப்போதும் அண்ணன் என்றே அழைப்பார். எம்ஜிஆரின் ஆசை ஒன்றை நிறைவேற்றி வைத்துள்ளார் சிவாஜி. அது என்ன என்று பார்ப்போம்.

எம்ஜிஆருக்குப் பிடித்த தியேட்டர் சென்னை சாந்தி.  ஒருமுறை சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு எம்ஜிஆர் இப்படி பேசினார். அப்போது எம்ஜிஆர் முதல்வராக இருந்தார்.

இதையும் படிங்க… நடு விரலை காட்ட சொன்ன ஆதிக்!.. அஜித் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?.. பிரபலம் சொன்ன பலே மேட்டர்!..

சாந்தி தியேட்டரைப் போல தான் பிறந்த ஊரிலும் தம்பி சிவாஜி கணேசன் ஒரு தியேட்டர் கட்ட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டாராம். கண்டிப்பாக அண்ணனின் ஆசையை நிறைவேற்றுகிறேன் என்றும் சிவாஜி அதே மேடையில் சொன்னாராம்.

அவரது மறைவுக்குப் பிறகு 2005ல் சாந்தி தியேட்டர் புதுப்பிக்கப்பட்டது. சாந்தி, சாய் சாந்தி என 2 திரையரங்குகளாக மாற்றப்பட்டது. அங்கு தான் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான சந்திரமுகி படம் 800 நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல எம்ஜிஆரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சிவாஜி தஞ்சாவூரின் மையப்பகுதியில்  2 தியேட்டர்கள் கட்டினாராம்.  அவரது சகோதரர் வி.சி.சண்முகம் இதற்கான கட்டிடப் பணிகளைக் கவனித்தாராம்.

ஒரு தியேட்டருக்கு சாந்தி என்று தனது மகளின் பெயரையும், மற்றொரு தியேட்டருக்கு கமலா என்று அவரது மனைவியின் பெயரையும் வைத்துள்ளார். இரண்டுமே ஏசி தியேட்டர்கள். ஆனால் தியேட்டர்கள் கட்டிப் பல நாள்கள் ஆகியும் அவற்றிற்கு உரிமம் வழங்காமல் மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்ததாம்.

இதையும் படிங்க… இதுக்கு கரகாட்டக்காரன் காரே தேவலாம்!.. இந்த தகர டப்பா காருக்குத்தான் கீர்த்தி சுரேஷ் வாய்ஸா?..

இது எம்ஜிஆருக்கு தெரியவர, உடனடியாக மாவட்ட ஆட்சியர் தியேட்டரைத் திறப்பதற்கான அனுமதி சான்றுடன் நேரில் வந்து சிவாஜியின் சகோதரரை சந்தித்துக் கொடுத்தாராம். அதன்பிறகு எம்ஜிஆரையே அழைத்து அந்தத் தியேட்டர்களுக்கு திறப்பு விழா நடத்தினார்களாம். 1984ல் திறப்பு விழா ஜரூராக நடத்தப்பட்டது.

அங்கு சிவாஜி மற்றும் பிற நடிகர்களின் படங்கள் திரையிடப்பட்டு வருமானத்தைப் பெற்றாராம். சிவாஜியின் சொந்த ஊர் தஞ்சாவூர் அருகில் உள்ள சூரக்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.